பனீர் டிக்கா

வழங்கியவர் : senthamizh selvi
தேதி : திங்கள், 30/03/2009 - 20:08
ஆயத்த நேரம் : 30 நிமிடங்கள்.
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு.
- பனீர் - 250 கிராம்,
- குட மிளகாய் - 1,
- பெரிய தக்காளி - 1,
- பெரிய வெங்காயம் - 1.
- பல்குச்சி - 20.
- மசாலாவுக்கு:
- தயிர் - அரை கப்,
- புதினா - 1 கைப்பிடி,
- கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி,
- பூண்டு - 2 பல்,
- எழுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி,
- பச்சை மிளகாய் - 4,
- கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
- சாட் மசாலா - 1 தேக்கரண்டி,
- வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
- பனீர், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும்.
- பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து நைசாக அரைக்கவும்.
- அரைத்த விழுதுடன் தயிர், கரம் மசாலா, மஞ்சள் தூள், எழுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.
- அதனுடன் பனீர், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை சேர்த்து பிரட்டி, அரை மணிநேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- வெளியே எடுத்து ஒரு பல்குச்சியில் (டூத் பிக்) பனீர், வெங்காயம், குட மிளகாய், தக்காளி என மாற்றி மாற்றி குத்தவும்.
- இதே போல் எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- மைக்ரோ அவனில் 15 நிமிடம் வைத்து லேசான ப்ரவுன் கலர் வரும் வரை கிரில் செய்யவும்.
- அவ்வப்போது வெளியே எடுத்து வெண்ணெயை அதன் மேலே தடவி, திருப்பி வைக்கவும்.
- சில வகை அவனில் லேசான ப்ரவுன் கலர் வருவதற்கு 20 நிமிடம் கூட ஆகலாம்.
- வெளியே எடுத்து சாட் மசாலா தூவி, நறுக்கிய வெள்ளரி, தக்காளியுடன் பரிமாறவும்.
- சுவையான பனீர் டிக்கா ரெடி.
Note:
விருந்துகளில் ஸ்டார்டராக கொடுக்கவும், மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கவும் சுவையான பக்க உணவு.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
அட... செல்வி என்ன ஒற்றுமை பாருங்க... இவ்வளவு நேரம் போராடி குறிப்பு போட்டுட்டு வந்து பார்த்த 2 இருக்கு... 2 முறை பதிவாயிட்டோன்னு பார்த்தா.... அதே பேரில் நீங்கலும் குடுத்து இருக்கீங்க. இதை நான் செய்து பார்க்கறேன் வற்ற புதன். மிக்க நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வனி,
நலமா? குழந்தைக்கு உடம்பு சரியில்லையா? இப்ப எப்படி இருக்கு?
அதானே!!! ஒரே பெயரில் அடுத்தடுத்து குறிப்பு. ஆச்சரியமா இருக்கு!! நிறைவாக ஒரு நல்ல குறிப்பு கொடுக்கலாம் என்று நினைத்து இதைக் கொடுத்தேன்.
செய்டு பார், ரொம்ப நல்லா இருக்கும்.
உன்னுடையதும் வித்தியாசமான குறிப்பா இருக்கு.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
really super... thanks a lot