ஆறு சதம் தந்து அசத்திய செல்வியக்காவை பாராட்டுவோம்...

வாழ்த்துக்கள். சூப்பர் ஸ்டாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி.

எல்லா பக்கத்துலயும் மேல கூட்டாஞ்சோறு ன்னு போட்டிருக்கு. அத க்ளிக் பண்ணினா அதுல ஒவ்வொருத்தரோட பேர்ல அவங்களோட குறிப்புகள் எல்லாம் கிடைக்கும்

இப்படிக்கு,
சந்தனா

திருமதி சேகர் அவர்களே மிக்க நன்றி, எல்லாத்தையும் வாசிப்பதால் அது எங்கு என்று தெரியாமல் இருந்தது, இப்ப ஒ.கே, பதிலுக்கு மீண்டும் நன்றி

ஹாய் ரூபி,
எப்படி இருக்கே? ரீமா எப்படி இருக்கா? உடம்பை கவனமா பார்த்துக்கோ.

உண்மைதான். சில சமயம் நான் என்ன சேர்த்து செய்தேன்னு எனக்கே மறந்துடும். ஏன்னா, நான் தினம் ஒரு வகையாக சமைப்பேன். சேர்க்கும் பொருட்களை மாற்றி எப்படி ருசி வருகிறதுன்னு பார்ப்பேன். அதல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்வதால் செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.

எங்கம்மா சமையல் பற்றி எங்க ஊர்ல எல்லாருக்கும் தெரியும். 100 பேருக்கு விருந்துன்னாலும், அசராமல் உதவிக்கு ஒரு ஆளை வைத்துக் கொண்டே ஒரு மணி நேரத்தில் விருந்து செய்து விடுவார்கள். பார்த்த, கேட்ட குறிப்புகளை செய்தும் பார்ப்பார்கள். ஆக சுறுசுறுப்பையும், சுவையாக சமைக்கும் விதத்தையும் என் அம்மாவிடம் கற்றுக் கொண்டேன்.

எங்க பாட்டியின் (அப்பாவின் அம்மா) கைமணம் சொல்ல வார்த்தை இல்லை. அவர்களிடம் இருந்து தான் பாரம்பரிய உணவுக் குறிப்புகளைக் கற்றுக் கொண்டேன். எங்க பாட்டி கொழுக்கட்டை செய்தால் இன்னிக்கெல்லாம் பார்த்து கிட்டே இருக்கலாம். அவ்வளவு அழகா விள்ளாமல், விரியாமல், ஒரே அளவில் சொப்பு செய்து மூடுவார்கள். அழகாக, பொறுமையாக சமைக்கும் முறையை என் பாட்டியிடம் கற்றுக் கொண்டேன்.

திருமணம் ஆகும் வரை என் அம்மா என்னை நம்பி சமைக்க விட மாட்டாங்க. தனிக்குடித்தனம் வைத்து விட்டு என் அம்மா கிளம்பியதும், நான் அழுது கொண்டே இருக்க பக்கத்து வீட்டு பாலு அம்மா (அவங்க பெயர் தெரியாது) பொண்ணுன்னா கல்யாணம் ஆன பிறகு பெற்றவர்களைப் பிரிந்துதான் ஆகணும். அதற்கெல்லாம் அழலாமான்னு ஆறுதல் சொன்னாங்க. நான் சொன்னேன், அதற்காக அழலை. எனக்கு சமைக்கத் தெரியாது, எப்படி சமைக்கிறதுன்னு தான் அழறேன்னு.
அடப்பாவிப் பொண்ணே! இதுக்கா அழறே, நான் சொல்லித் தர்றேன்னு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பிறகு நானே குறிப்புகளையும், ஊருக்கு வரும் போது அம்மா செய்வதையும் பார்த்து ஒரு வெறியாக கற்றுக் கொண்டேன். எல்லாவற்றையும் சிறிய அளவில் எடுத்து செய்து பார்ப்பேன். சரியாக வரலைன்னா, யாரும் பார்க்குமுன் கொட்டிட்டு கழுவி வைத்து விடுவேன்.
உப்பு போடாமலும், அதிகம் போட்டும், தீய்த்தும் வைத்த நாட்கள் நிறைய!! ஆனா, இப்ப எவ்வளவு செய்தாலும் ருசியே பார்க்காமல் தான் செய்வேன். அதையெல்லாம் இப்ப நினைச்சா சிரிப்பா வரும்.

நான் இப்ப இந்த அளவு சிறப்பாக சமையல் செய்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் என் கணவர் தான். நான் என்ன சமைச்சாலும் சாப்பிட்டு, என்னை ஊக்கப்படுத்துவார்.

இன்று இத்தனை குறிப்புகள் கொடுத்து இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் எல்லோரும் கொடுத்த ஊக்கமும், பின்னூட்டமுமேயாகும்.

எனக்கு பிடிக்காதுன்னு எதுவுமே கிடையாது. ஆனா, வெஜ் உணவுகள் ரொம்ப பிடிக்கும். கொழுக்கட்டை எனக்கு ரொம்ப பிடிச்சது.
நான் கொடுத்த குறிப்புகளில் எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு நிறைய பாராட்டும் கிடைச்சிருக்கு. அடுத்து சேலம் மட்டன் குழம்பு. எங்க ஊர் பாராம்பரிய குழம்பு வகை அது. இன்னும் நிறைய பாராட்டை பெற்றதுன்னு சொன்னா சேலம் மீன் குழம்பு. என் பாட்டியின் கைமணம்!!
பாதாம் புதினா சிக்கன் நான் எதேச்சையாக கண்டுபிடிச்சது. அதுக்கு அப்படியொரு பாராட்டு கிடைக்கும்னு நினைக்கவே இல்லை.
அதன் ருசியில் எல்லாருமே மயங்கிப் போவார்கள்.

என்னுடைய எழுத்து நடைக்கு என் அம்மா தான் காரணம்(டீச்சராச்சே!).எளிமையா, திருத்தமாக இருப்பதற்குக் காரணம் என் கணவர். அவர் படிச்சு பார்த்துட்டு அவருக்கு புரிஞ்சாதான் ஓகே சொல்வார். இல்லைன்னா, எனக்கு புரியலை. என்னை மாதிரி இருப்பவர்களுக்கு புரியாது. தெளிவாக சொல்லுன்னு சொல்வார். முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் குறிப்புகள் கொடுக்க சொல்வார். சிலநேரம் தமிழ் வார்த்தைகளுக்காக ரொம்ப யோசிப்பேன்.

நன்றி ரூபி, என் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வைத்தமைக்கு. ஒரு வார்த்தை கேட்டதுக்கு இப்படியா அறுக்கிறதுன்னு கேட்கிறது காதில் விழுது. அதனால், இத்துடன் முடிக்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி ரூபி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சுஸ்ரீ,
பலப்பல வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்பு காயத்ரி,
மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

அன்பு தேவா,
நலமா? ரொம்ப நாளாச்சு? இமாலய சாதனையெல்லாம் ஒன்றுமில்லை. சில நூறுகளா? அது அவ்வளவு சுலபமா, என்ன? வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே செய்து பார்த்து குறிப்புகள் கொடுப்பதால் தான் எளிமையாக உள்ளது. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

அன்பு தனி,
நலமா? அஃப்ரா நலமா? குறிப்புகள் கொடுப்பது மட்டுமே என் வேலை, அது சூப்பரா இல்லையான்னு நீங்க எல்லாம் தான் சொல்லணும். அப்படியா? நீண்ட நாள் உறுப்பினர்களை பார்த்ததில் எனக்குமே ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு. உன்னோட ப்ரார்த்தனைக்கும், பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

முக்கியமான சேதி தானே, நாளைக்கே சொன்னா போச்சு ! :-)

அன்பு மாலதி,
மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. குஷ்பூ இட்லி எங்க ஊர் ஃபேமஸ். நல்லாவே இருக்கும். சாஃப்ட் தான் அதனோட சிறப்பே. நன்றி.

ஹாய் பூஜா,
அறுசுவைக்கு புதிசா வந்ததுக்கெல்லாம் ஐயோ சொல்ல வேண்டாம். வந்தவுடனேயே வாழ்த்திய உன் நல்ல உள்ளத்துக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கும் நன்றி. ஒரு வழியா குறிப்புகள பார்த்தாச்சா? (நன்றி திருமதி. சேகர், உதவியதற்கு).

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா, 600 குறிப்புக்கள் கொடுத்த உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.மேலும் பல குறிப்புக்களைக் கொடுத்து 1000 தொட வாழ்த்துகிறேன்.
குறிப்புக்களைக் கொடுப்பதற்கு உதவி செய்த உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

செல்வி அக்கா நன்றி கூடிவிட்டது, மிக மிக பயனுள்ளதாக இருந்தது, நன்றி

வாழ்த்துக்கள் செல்விம்மா 600க்கு மேல் குறிப்புகள் கொடுத்து அசத்திட்டிங்கள்.
மேலும் பல குறிப்புக்களைக் கொடுத்து,சாதனைப் படைக்க அனைத்து தோழிகள் சார்பிள் வாழ்த்துக்கள்:)

அன்புட்ன்,
ஜாஸ்மின்.

6 சதம் அடிச்ச செல்விக்காக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..எப்படி இருக்கீங்கக்கா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

செல்விக்கா உங்க பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.உங்களை சொல்ல வைத்த ரூபிக்கும் நன்றி.திருமணமான புதிசுல சமையலுக்காக நான் தான் அழுதேன்னு நினைச்சேன். நீங்களுமாங்கா! அறுசுவைக்கு வரதுக்கு முன்னாடி தினமும் அம்மாகிட்ட போன்ல எது கேக்கறனோ இல்லையோ சமைக்கறது எப்படினு கேட்டுகிட்டே இருப்பேன்.தினமும் அம்மா ரெசிபி குடுக்கனும்.இப்ப அறுசுவையால ஓரளவு சமைக்க கத்துகிட்டேன்(நிச்சயமா முன்ன மாதிரி அழுத நாள்கள் இப்ப இல்லவே இல்ல.அறுசுவைக்கு என் நன்றிகள். அருமையாக குறிப்பு குடுக்கும் தோழிகள், சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகள்) அக்கா 2 நாளுக்கு முன்ன உங்க சுரைக்காய் பால் கறி ஏகப்பட்ட பாராட்டு வாங்கி தந்தது.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு வத்சலா,
மனம் நிறைந்த வாழ்த்துக்கு நன்றி. 1000 த்தை தொடவா? பார்ப்போம். என் கணவர் சார்பாகவும் நன்றி.

அன்பு ஜாஸ்மின்,
வாழ்த்துக்கு மிக்க நன்றிம்மா.

அன்பு மர்ழி,
நான் நலம். நான் உன்னை வேறுபக்கத்தில் கேட்டு பதிவு போட்டால் நீ இங்கு பதிவு போட்டிருக்கிறாய். உடம்பை பார்த்துக்கோ. இப்ப குளிர் ஜுரம் அடிக்கடி வரக்கூடாது. ஏசியை அதிகம் போடாதே. நாளை உனக்கு போன் செய்து திட்டுகிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

அன்பு திவ்யா,
முயற்சி செய்தால் யார் வேண்டுமானலும் நல்லா சமைக்க கத்துக்க முடியும்ங்கிறதுக்காகத்தான் என்னைப் பற்றி சொன்னேன்.
சுரைக்காய் பால் கறி என் அம்மாவின் நல்ல குறிப்புகளில் ஒன்று. நன்றிம்மா.
பாப்பா எப்படி இருக்கா? முடியும் போது மெயில் பண்ணு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்