பீன்ஸ் பிரட்டல்

தேதி: March 31, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீன்ஸ் - 250 கிராம்
வெங்காயம் - 40 கிராம்
கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் கொடுப்பட்டிருக்கும் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பீன்ஸ் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விடவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் பீன்ஸை சேர்த்து பிரட்டி விடவும்.
பீன்ஸுடன் 100 மி.லி சூடான தண்ணீரை ஊற்றி கறித்தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.
பீன்ஸ் நன்கு வெந்ததும் தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து பிரட்டி விடவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிரட்டலாக வந்ததும் இறக்கி வைக்கவும்.
எளிதில் செய்யக்கூடிய சுவையான பீன்ஸ் பிரட்டல் தயார். அறுசுவை உறுப்பினரான திருமதி. வனிதா அவர்களின் குறிப்பினை பார்த்து இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட... பார்க்க நம்ம செய்வது மாதிரியே இருக்கே, பார்ப்போம்'னு ஓப்பன் பண்ணேன்... அதிரா... சூப்பர். மிக்க நன்றி.. சர்ப்ரைஸ்'அ இருந்தது, நீங்க செய்து என் குறிப்பை முகப்பில் பார்ப்பது இன்னும் பல மடங்கு சந்தோஷத்தை தருது. :)

அண்ணா... குறிப்பு வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி அட்மின்.

"தக்க தருணத்தில் சொன்ன வார்த்தை, வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமன்".

வனிதா கோபமாக இருக்கிற இந்த நேரத்தில் இப்படம் வந்துள்ளதால்தான் அந்த வசனம். வனி.... நான் இங்கிருக்கிறேன்.. இங்க... இங்க..... இனி இறங்கட்டோ பெஞ்சை விட்டு?:).

மிகவும் ஸ்லோவாக இருக்கு, குறிப்புக்கள் எடுத்துவிட்டேன் செய்துவிட்டு வருகிறேன். வனிதா... அதிரடி அதிரா, இப்ப அதிரடி கோழிக்கறியா?:) இது நல்லாவே இல்லை:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்ல இருக்கு பீன்ஸ் பிரட்டல்.எனக்கு யாராவது காய் செய்து தந்தால் சாப்பிடுவேன்.கோழி இப்ப வெறுத்து போய் விட்டது.நானும் வெஜ்க்கு மாறப்போறேன்.ஃப்ரிட்ஜில் உள்ள கோழியும்,மீனும் என்னை முரைத்து பார்க்குது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா..... ஒகோ... இது வந்தா எனக்கு கோவம் போயிடுமா??!!! யார் சொன்னா?? நில்லுங்கோ மேலயே.

ஆசியா.... எங்க வீட்டுக்கு வாங்க வித விதம்மா சைவம் சமைச்சு தற்றேன். :) ஆசியா... பதிவு பார்த்தீங்களா??? உங்க எண்ணை கத்திரிக்காய் சமைச்சு பார்ட்டில பாராட்டு வாங்கினேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி பாராட்டுக்கு நன்றி.அதிரா என்னை 2 குறிப்பு அதிகம் செய்யச்சொல்லிடுவங்க,இங்கு பீன்ஸ் பிரட்டல் பற்றி மட்டும் தான்.நிஜமாக அதிரா அழகாக செய்திருக்காங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா, பீன்ஸ் பிரட்டலில் உங்கள் கறித்தூளில் இருக்கும் பொடிகளைப் போட்டு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கும், வனிதாவிற்கும்.

ஆசியா, வின்னி மிக்க நன்றி.
வின்னி நீங்கள் சமைச்சு, பிரிச்சில வச்சு, சாப்பிட்டு முடிக்க நாளாகுமே:) என்றுதான் இவ்வளவு நாளும் உடன் பதில் போடாமல் இருந்தேன்.. என்னை மன்னிக்கவும் பிந்திய நன்றிக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்