விமான பயணம்

1 1/2மாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்ய இயலுமா?

நன்றி

இயலும் என்றாலும் முன்கூட்டி எல்லாவற்றையும் மனதில் கண்டு போக வேண்டும்..சின்ன குழந்தை என்பதால் சில சமயம் பயனம் ரொம்ப ஈசியாக அமையும் சில சமயம் கஷ்டமாக இருக்கும்(அழுதால்)
குழந்தை எந்த நேரத்தில் நன்றாக தூங்குமோ அந்த நேர பயனம் செய்ய முயன்று பாருங்கள்...தேவையான எல்லா பொருளும் மறக்காமல் கைய்யருகே வைப்பது நல்லது..குழந்தைக்கு உடை முதல் உணவு வரை வீட்டில் இருப்பது போல எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.
நீங்களும் சாதாரண பருத்தி ஆடை உடுத்துங்கள் அதிக வேலைபாடுள்ள ஆடை போட்டால் குழந்தை அழுகும்.தாய்ப்பாலா புட்டிப்பாலா?
ஒன்று எந்த நேரத்திலும் எடுத்து கொடுக புட்டிப்பாலும் கொடுத்து பழக்கியிருக்க வேண்டும் இல்லை பழக்கமில்லை என்றால் தயங்காமல் எந்த நேரமும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
சிலர் அடுத்தவரகள் முன்பு பால் கொடுக்க கூச்சப்பட்டு குழந்தையை வீர் என்று அழுக விட்டு கஷ்டப்படுவார்கள்..அப்படி செய்யாமல் குழந்தையின் ஆரோகியம் மட்டும் தான் எனக்கு முக்கியம் என்று நினைத்து தகுந்த சால்வை அல்லது அதற்கேற்ற பால் கொடுக்க ஏதுவான ஆடை உடுத்தி கொள்ளுங்கள்.
விமான டேக் ஆஃப் அப்பவும் லேன்டிங் அப்பவும் கட்டாயம் பால் கொடுக்க வேண்டும்..காதில் பஞ்சு வைத்து விடவும்.அந்த நேரத்தில் பால் கொடுக்க முடியாமல் காது வலி வந்து அழுகும் குழந்தைகள் தான் அதிகம்..டேக் ஆஃபிற்கு அரை மணி முன்பாக பால் கொடுத்து விட்டு அந்த நேரத்தில் பசியோடு இருக்கும்படி பார்த்துக் கொண்டால் அது தூங்கி விடும்.
கைய்யில் குட்டி மியூசிக் கேட்கும் டாய்(கிலுக்கம்) வைத்துக் கொண்டால் அதைக் காட்டி கொஞ்சம் சமாளிக்கலாம்..
குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் கொடுக்கும் மருந்து மற்றும் ஜலதோஷ மருந்தை மருத்துவரிடம் கேட்டு வாங்கி ஹேன்ட் பேகேஜிலேயே ரெடியாக வைய்யுங்க..சில குழந்தைக்கு சட்டென க்லைமேட் மாறியதும் சளி அல்லது காய்ச்சல் வரும்
அம்மாவும் டென்ஷனாகாமல் நல்ல சாப்பிட்டு ரிலாக்ஸ்டா போங்க

தளிகா..!! நீங்க டெலிவரிக்கு இந்தியா வரப்போகிறீர்களா? அல்லது அங்கேயே இருக்கப்போகிறீர்களா? கூட உதவிக்கு யார்? வாந்தி எல்லாம் இருக்கா? சரியாகிவிட்டதா?

ஹாய்
தளிகா சொன்னமாதிரி எல்லாமே முன்னாடியே ப்ளான் பண்ணிக்குங்க,. அத்துடன், டேக் ஆஃப், லேன்டிங்கின்போதும் குழந்தைக்கு எப்பவும் பால் கொடுக்கும்போது நல்லா மூச்சு விட வசதியா இருக்காமாதிரி படுக்க வெச்சுக்குங்க.
எந்த சூழ்நிலையிலும் புரை ஏறாமல் இருக்கட்டும். ரொம்ப குட்டி குழந்தையா இருக்க தாலே புரை ஏற வாய்ப்புகள் அதிகம். அப்ப பதட்டப்படாம என்ன பண்ணனும்னு தெரிஞ்சு வெச்சுக்குங்க!
சில குழந்தைகள் இந்த மாதிரி நேரத்தில் தொடர்ந்து வீறிட்டு அழுதுகொண்டே இருக்கும்.
அப்பவும் பதட்டப்படாம தூக்கிட்டு நடக்கவும் தயாரா இருக்கணும். எதற்கும் நீங்க டெலிவரி பார்த்தீர்களோ அந்த டாக்டரிடமே ஒருமுறை ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்!
ஆல் த பெஸ்ட்!

ஹாய் மாலதியக்கா
நான் நல்லா இருக்கேன்..வாந்தி கடவுள் புன்னியத்தால் முன்பும் இல்லை இப்பவும் இல்லை சில சமயம் ஒரு டெம்ப்டேஷன் இருக்கும் கட்டுப்படுத்திக்குவேன்..இப்ப அதெல்லாம் மாறிடுச்சு முன்னை போலவே இருக்கேன்..டெலிவெரி இங்கயா தான் இருக்கும்..அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்..வறேன் என்றார்..அம்மா வந்தால் எனக்கு ப்ரச்சனையே இல்லை ஊரில் கூட ஒரு வேலைக்கு ஆளிருந்தால் கூட வேலை ஓயாது..இங்கு எல்லாம் சுலபம் தான்..நான் பார்க்கும் மருத்துவமனை நடந்து செல்லும் தூரத்தில் தான் உள்ளது..முக்கிய காரணம் ரொம்ப நாள் இருந்து விட்டு திரும்ப வந்தால் மகள் ரொம்ப ஏங்கிவிடுவாள் பிறகு சமாளிக்க எனக்கு கஷ்டம்..எல்லாம் முடிந்து ஒரு ஷாட் வெகேஷன் போய் வர தீர்மானம்..எல்லாம் நல்லபடியா நடக்கனும்..நீங்கள் நலமா?மகன் பேஎங்களூரிலா.மகள் மற்றும் பேரன் நலமா

hi

hai sisters

hai akka

மேலும் சில பதிவுகள்