செட்டியார் குடை செய்வது எப்படி?

தேதி: March 31, 2009

5
Average: 4.8 (5 votes)

இந்த அழகிய செட்டியார் குடையை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சுபா அவர்கள்.

 

குடை - 1
உல்லன் நூல் - அரை கண்டு
சம்கி
மணி
பெவிகால்

 

செட்டியார் குடை செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குடையின் அடியில் வட்டமான பகுதியில் கம்பி ஆரம்பமாகும் இடத்திலிருந்து நூலை முடிச்சு போட்டு சுற்றவும்.
பிறகு அதன் தொடர்ச்சியாக இருக்கும் கம்பியில் நூலை சுற்றிக் கொண்டே வரவும். மேலே சுற்றும் பொழுது நெருக்கமாக சுற்றவும்.
குடையின் கீழ் பகுதியிலிருந்து மேல் வரை சுற்றிய பிறகு ஏழு கம்பிகள் இணைந்திருக்கும் இடத்திற்கு வந்ததும் ஏழு கம்பியில் ஏதேனும் ஒரு கம்பியில் ஒரு முறை நூலை சுற்றவும். அடுத்து, சுற்றிய அந்த நூலை அடுத்த கம்பியில் வைத்து ஒரு முறை சுற்றவும்.
இதைப் போல அடுத்தடுத்து கம்பிகளில் சுற்றிக் கொண்டே போகவும். பார்க்க சிலந்தி வலை போல இருக்கும்.
ஏழு கம்பிகளிலும் நுனி வரை இதைப் போல சுற்றிக் கொள்ளவும்.
சுற்றி முடிந்த பிறகு ஏதேனும் ஒரு கம்பியில் பூக்கட்டுவது போல் முடிச்சி போட்டு முடித்து விடவும். முடித்து விட்டு நூலை வெட்டி விடவும்.
நூல் சுற்றி முடிவடைந்த பின்னர் கம்பிகள் இருக்கும் இடத்தில் மட்டும் பெவிகாலை தடவி சம்கியை வைத்து ஒட்டவும்.
மணியில் நூலை கோர்த்து ஒவ்வொரு கம்பின் நுனியிலும் கட்டி விடவும்.
பெரிய ஜம்கி ஒன்றை எடுத்து மேல் புறத்தில் ஏழு கம்பிகள் இணையும் இடத்தில் வைத்து ஒட்டவும்.
அழகிய செட்டியார் குடை ரெடி. இந்த குடையை கொலு நேரங்களில் வீட்டில் உள்ள செட்டியார் பொம்மையின் பின்புறத்தில் வைத்து அலங்கரிப்பார்கள். பார்க்க அழகாக இருக்கும். விருப்பப்பட்டால் இன்னும் பெரிய அளவிலான குடைகளில் செய்யலாம். விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஆஹா. சுபா, குடை மிகவும் அழகாக இருக்கிறது. :-) விரைவில் செய்து பார்க்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சுபா,
குடை புது விதமாக மிக அழகாக இருக்கிறது.
அன்புள்ள,
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta