ஸ்வீட் கார்ன் சுண்டல்

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு: 2 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ப்ரோசன் ஸ்வீட் கார்ன் - 1 கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் -2
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி, புதினா இலை - சிறிது
உப்பு - தேவைக்கு


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, விதை நீக்கி கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை தாளிக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், டீப்ராஸ்ட் செய்த கார்ன் சேர்த்து பிரட்டவும். சிறிது உப்பு தூவி, தேங்காய் துருவல், மல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.
சுவையான மணமான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்