காளான் கத்திரிக்காய் கறி

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - கால் கிலோ
காளான் - 200 கிராம்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தக்காளி - 2 பெரியது
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
சீரக பவுடர் - 1 டீஸ்பூன்
மல்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள்பவுடர் - அரை ஸ்பூன்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு


 

கத்திரிக்காய், காளான், வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும். பூண்டு தட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு தாளித்து வதங்கியவுடன், கத்திரிக்காய், காளான் சேர்க்கவும். சில்லி, மல்லி, மஞ்சள்தூள், சீரக பவுடர்களை சேர்த்து பிரட்டி 3-5 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவைக்கவும், வெந்தவுடன் பொடியாக கட் செய்த தக்காளியை சேர்த்து பிரட்டி மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். நன்றாக தக்காளி மசிந்து கறி கெட்டியானதும் மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான காளான் கத்திரிக்காய் கறி ரெடி. இது சாதம், சப்பாத்தி உடன் பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

thanks for the recipe. is it ok if you don't add dhania powder. will it taste good.

Today I tried this dish and it went good with chapathi.

Thanks for the receipe.

Thyagu

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.