கீரை சாம்பார்

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

துவரம்பருப்பு- 2 கைப்பிடி
பொடியாக அரிந்த கீரை- 2 கப்
பொடியாக அரிந்த தக்காளி- ஒன்றரை கப்
பாதியாக அரிந்த சிறிய வெங்காயம்- 1 கப்
கீறிய பச்சை மிளகாய்-3
கட்டி பெருங்காயம்- அரு நெல்லி அளவு
கடுகு- 1 ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமலில்லி- அரை கப்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
புளி- எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி- 1 ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெய்- 4 மேசைக்கரண்டி


 

துவரம்பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க்கவும்.
கடுகையும் காயத்தையும் போட்டு அவை பொரிந்து வெடித்ததும் வெங்காயம் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வதக்கவும். மேலே எண்ணெய் தெளிந்து வந்ததும் புளியைக் கரைத்து ஊற்றவும்.
புளி நீர் சற்று கொதித்ததும் பருப்பை ஊற்றி, போதுமான உப்பு சேர்த்து ஒரு கொதி வரும்போது கீரையைச் சேர்க்கவும். கீரை முக்கால்வாசி வெந்து நிறம் மாறும் முன் சாம்பார்ப்பொடியைத்தூவி, தீயை மிகவும் குறைத்து வைக்கவும்.
ஒரிரு நிமிடங்களில் அடுப்பை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ மேடம் நான் எப்போது கீரையும் பருப்பும் குக்கரில் வேகவைத்து தான் செய்வேன் இன்னைக்கு உங்க குறிப்பை அப்படியே செய்தேன் சுவை வித்தியாசமா, நன்றாகவும் இருந்தது.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).