காலிஃப்ளவர் மஞ்சூரியன் (கிரேவி)

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (13 votes)

 

காலிஃப்ளவர் சிறியது - ஒன்று
தக்காளி - 3
வெங்காயம் - 3
வெங்காயத்தாள் - சிறிது
சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
கார்ன் மாவு - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறுத் துண்டுகளாக நறுக்கி கொதி நீரில் போட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிநீரில் போட்டு தோல் உரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பூண்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை ஊற்றவும்.
அதனுடன் உப்பு, சர்க்கரை, சாஸ் வகைகள் சேர்த்து நன்கு ஒன்றாகும்படி கிளறி விடவும்.
தண்ணீர் வடித்து வைத்திருக்கும் காலிஃப்ளவருடன் உப்பு, சிறிதளவு எண்ணெய் மிளகாய்த்தூள் சேர்த்து பிசறவும். காஷ்மீரி மிளகாய்த்தூள் இல்லாவிட்டால் சாதாரண மிளகாய்த்தூள் சேர்க்கலாம். பிசறும் போது சிறிது கேசரிப்பவுடர் சேர்க்கவும்.
பிசறிய காலிஃப்ளவருடன் மைதா, கார்ன் மாவு சேர்த்து பிசறி ஓவனில் மொறுமொறுப்பாகும் வரை க்ரில் பண்ணவும். ஓவன் தட்டில் காலிஃப்ளவரை பரப்பியதும் மேலாக 1 டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் தெளித்த பின்னர் க்ரில் செய்யவும். இப்படி கிரில் பண்ணுவதன் மூலம் எண்ணெய் குறைவாக உபயோகிக்க முடியும்.
கிரேவியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி விட்டு பின்னர் இறக்கவும்.
கிரேவியில் க்ரில் செய்த காலிஃப்ளவரை கலந்து, பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனை தூவவும்.
சுவையான காலிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி. இதனை சப்பாத்தி, நாண், புல்கா, பரோட்டா போன்றவற்றுடன் பரிமாறவும்.
அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் பார்த்தவுடனேயே செய்து சாப்பிடனும் போல் உள்ளது,உங்க கைவன்ன சமையலை சாப்பிடுவதற்காகவே கண்டிப்பா இந்தியா வர வேண்டும். நல்ல ப்ரசண்டேஷன்+ தெளிவான படங்கள்.

குறிப்பைப்பார்த்ததுமே பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள்.மிக்க நன்றி விஜி.என் சமையலை சாப்பிடுவதற்காகவே இந்தியா வர வேண்டும் என்ற வரிகள் எனக்கு மகிழ்வைத்தந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

குறிப்பைப்பார்த்ததுமே பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள்.மிக்க நன்றி விஜி.என் சமையலை சாப்பிடுவதற்காகவே இந்தியா வர வேண்டும் என்ற வரிகள் எனக்கு மகிழ்வைத்தந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

குறிப்பைப்பார்த்ததுமே பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள்.மிக்க நன்றி விஜி.என் சமையலை சாப்பிடுவதற்காகவே இந்தியா வர வேண்டும் என்ற வரிகள் எனக்கு மகிழ்வைத்தந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

indha dish parkava romba nalla iruku.idhai naan kantippaga saidu parkiran.

indha dish parkava romba nalla iruku.idhai naan kantippaga saidu parkiran.

indha dish parkava romba nalla iruku.idhai naan kantippaga saidu parkiran.

அன்பு தோழி ஸாதிகா,
எங்களை நல்லா ஏமாத்தீட்டீங்க! நாங்க வந்த போது இதெல்லாம் செய்து தரவே இல்லை:-( இதற்காக இன்னொரு முறை உங்க வீட்டுக்கு வரப்போகிறோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி jannu பின்னூட்டத்திற்கு நன்றி.அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
அதென்னமோ தெரிய வில்லை.எனக்கு மூன்று முறை பதிவாகி விட்டது.இப்போது உங்களுக்கும் அப்படியே !
ஸாதிகா

arusuvai is a wonderful website

அடடா,உங்களுக்கு வெஜிடேரியன் உணவு வகைகள் மிகவும் பிடித்தமாச்சே.வாங்க..வாங்க..செய்து தந்துவிட்டால் போச்சு.
ஸாதிகா

arusuvai is a wonderful website

i tried it today, it came out well.Thanks for ur dish

Thyagu

குறிப்புக்கு பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.அறுசுவைக்கு தாங்கள் மிக சீனியர் என்று உங்கள் புரொபைலில் தெரிந்து தெரிந்து கொண்டேன்.ஆனால் இப்போதுதான் முதன் முதலாக உங்கள் பதிவைப்பார்க்கிறேன்.பின்னூட்டம் அனுப்பியது மகிழ்ச்சி அளிக்கின்றது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா அசத்துங்க கலக்குங்க, ரொம்ப அருமை உங்கள் அமிரும், காலிபிளவர் மன்ஞ்சூரியனும். சூப்பர்,

இன்னும் நிறைய குறீப்புகல் படத்துடன் கொடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

நான் கிரேஸ்ரவி iam using intercard so iam not able to put my comments always but i read all the comments in this here and there i will come and see. ur son i think he is so cute more than ur receipe. God bless u all . next time i will type in tamil.

விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்! கிரேஸ்ரவி

இல்ல கிரேஸ்ரவி, அவங்க அந்த குழந்தையோட பாட்டி(ஹி ஹி ஹி).அப்பா.. என்னோட வேலை முடிஞ்சது.
ஸாதிகா மேடம் முறைக்க கூடாது சரியா??

உங்க ரெசிப்பி சூப்பர் செய்து பார்த்துட்டு பின்னூட்டம் அனுப்பறேன்.ஏற்கனவே செய்த ரெசிப்பிக்கே இன்னும் பின்னூட்டம் அனுப்பலை.உங்க ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் செஞ்சேன் அங்க வந்து பின்னூட்டம் தரேன்.

ஆஹா ஷாதிகா ஆண்டி
நேத்திலிருந்து இந்த குறிப்பை பாத்து ஜொள்ளு விடவே அடிக்கடி அறுசுவைக்கு வந்துட்டிருக்கேன்..எண்ணை அதிகம் வேண்டி வருமே என்று செய்யாமல் இருந்தேன் இது அருமையா இருக்கு.ஆமிர் செம்ம ஸ்டைலா இருக்கார்

ஜலி,உங்கள் அன்புக்கும்,பாராட்டுக்கும்,ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.குறிப்பைப்பார்த்ததுமே அறுசுவை ஓப்பண் ஆக லேட் ஆகிறது என்பதால் உடனே ஆஃப் லைன் மெசேஜ் அனுப்பிய உங்கள் பாசத்தை நினைக்கும் பொழுது உண்மையில் சந்தோஷமாக உள்ளது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பல தடவை refresh செய்து இப்ப தான் ஓப்பன் ஆகுது,சூப்பர்.சேர்த்திருக்கும் சாமானை பார்த்தாலே ருசி அருமையாக இருக்கும் என்று தெரிகிறது,இன்று பேக்கிங்,நாளை அல்-ஐன் ஷிஃப்டிங்.அப்புறம் அட்மிஷன் அலைச்சல் என்று நிறைய இருக்கு.எக்ஸாம் முடிந்தும் ரிலாக்ஸாக இல்லை.மாமாவுக்கு உடல்நலம் குறைவாக இருக்கு.உதவிக்கு ஆள் தேவைப்படுவதால் ஏப்ரல் இறுதியில் ஊர் பயணம்.நாங்கள் எல்லோரும் போய்விட்டு,ஓரு வாரத்தில் மகனும் அவங்களும் திரும்பி விடுவாங்க.நானும் மகளும் அங்கே.உங்களிடம் சொன்னால் அறுசுவையில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் சொன்ன மாதிரி நினைத்துகொள்கிறேன்.ரொம்ப டயர்டாக இருப்பதால் பதிவுகள் அதிகம் போட முடியலை,எத்தனை முறை refresh செய்வது.எல்லாவற்றிற்கும் துவாச்செய்யுங்கள்.நேரம் கிடைக்கும்போது அறுசுவை வந்து பார்வையிடுவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நேற்றிலிருந்து இந்த குறிப்புக்கு பின்னூட்டம் அளிக்க வந்தேன் முடியவில்லை. ரொம்ப சூப்பரான குறிப்பு. ஆயில் இல்லாமல் நல்ல ஹெல்த்தியா கொடுத்திருக்கீங்க. நான் காலிப்ளவரை எண்ணெயில்தான் பொறித்தெடுப்பேன். இது பார்க்கும் போதே ரொம்ப டாப். படங்களும் மிக தெளிவா புரியும் படி இருக்கு அக்கா. நாக்கில் எச்சில் ஊறுது. இந்த வாரம் செய்திடுவோம்ல..

ஆமிரின் குறும்பு சிரிப்பு கூடுதல் அழகு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.எனது ரெசிப்பியைவிட ஆமிர் அழகு என்ற உங்கள் கமண்ட் எனக்கு சந்தோஷத்தைத்தருகின்றது.ஆமாம் தங்கை கவி சொன்னது உண்மைதான்.அது என் மகன் அல்ல..பேரன்.இரண்டுவயது வரப்போகின்றது.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகண்டிப்பாக அடுத்த முறை தமிழில் டைப் செய்யுங்கள்.இனி அடிக்கடி உங்கள் பதிவுகளை காண தயாராகி விட்டோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இப்ப திருப்தியா?நான் பாட்டியேதான்.போதுமா?ஒரு சோகம் என்னவென்றால் ஆமிருக்கு பாட்டி என்று வர மறுக்கின்றது.க்கா க்கா என்று என்னை அழைக்கின்றான்.(அப்போ..க்காவை அக்கா என்றுதான் அர்த்தம் எடுக்க வேண்டும்.அப்படித்தானே??).
பின்னூட்டத்திற்கு நன்றி.இப்படி கலகலப்பான பின்னூட்டங்கள்,பதிவுகளைப்பார்க்கும்பொழுது நான் அக்காவாக இல்லை,தங்கையாக ஃபீல் பண்ணுகின்றேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தங்கை தளிகா?நலமா?குட்டி மகன் என்ன பண்ணுகின்றார்?பிரசவத்திற்கு இந்தியா வருவீர்களா?இல்லை அங்கேயேவா?உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.பிள்ளைதாச்சி பெண்.ஜொள் விடாமல் உடனே செய்து சாப்பிட்டு விடுங்கள்.இவ்வளவு நேரம் மர்ழியாவும் போனில் ஜொள் விட்டூக்கொண்டிருந்தார்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஆஸியா,
பின்னூட்டதிற்கு நன்றி.அல்-ஐன் ஷிஃப்டிங்கா?இவ்வளவு பிஸியிலும் வந்து பதிவு போடுகின்றீர்கள்.அல்-ஐனில் ஷிஃப்ட் ஆகி பிள்ளைகளுக்கு நல்ல ஸ்கூல் அமைந்து,இதை விட இன்னும் வளப்பமாக வாழ வாழ்த்துக்கள்.உங்கள் மாமாவும் நல்லபடி குணமாகி,விரைவில் நீங்கள் அல்-ஐன் திரும்ப வாழ்த்துக்கள்.முடிந்தால் மெயில் செக் பண்ணுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பின்னூட்டத்திற்கு நன்றி தனிஷா.உங்கள் வரிகள் உற்சாகத்தை அளிக்கின்றது.உண்மைதான்.இந்த மஞ்சூரியன் செய்வதென்றால் காலிபிளவரை பொரிப்பதற்கு எண்ணெய்,வதக்குவதற்கு வேறு எண்ணெய்.இப்போதெல்லாம் ஆயில் ஐட்டம் குறைத்துக்கொண்டு காய்களை 1டீஸ்பூன் எண்ணெய் கலந்து கிரில் செய்து விடுவேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகாக்கா நேற்று உங்க க்ரேவி தான் செய்தேன்.சுப்பரா இருந்தது.எனக்கு காலிபிளவர்ன்னா உயிர்.அதுல என்ன ஐயிட்டம் செய்தாலும் பிடிக்கும்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.மஞ்சூரியன் சூப்பராக வந்தது என்பதில் மகிழ்ச்சி.எனக்கும்காலிபிளவர் என்றால் மிகவும் விருப்பம்.கடைகளிலும்,வண்டிகளிலும் அழகாக அடுக்கி வைத்திருக்கும் காளிபிளவரை மட்டுமல்ல மாம்பழத்தை பார்த்தாலுமே அத்தனையையும் அள்ளிக்கொண்டு வர வேண்டும்போல் இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஸாதிகாஅக்கா நேற்று உங்க காலிபிளவர் மஞ்சூரியன் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது நன்றி

i tried this receipe sathica it turns good.very tasty also thangs