கீரை மசியல்

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கீரை - 1 கட்டு
தக்காளி - 2
வெங்காயம் - 1
சில்லிபிளேக்ஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்


 

கீரையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கியவற்றை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் கீரையை சேர்த்து கிளறி, சிறிது நீர் சேர்த்து பாத்திரத்தை மூடி விடவும்.
கீரை வெந்து நீர் வற்றியதும், சில்லி பிளேக்ஸை சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் கீரை மசியல் செய்தேன் நல்லா இருந்தது நன்றி

இந்த கீரை மசியல் இன்று செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. காரம் கொஞ்சமா போட்டு செய்தேன். குழந்தைகள் சாப்பிட்டாங்க.

கீரை மசியல் செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.குழந்தைகள் பிடித்தமைக்கு மகிழ்ச்சி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிக்கா மேடம் உங்கள் கீரை மசியல் செய்தேன் நல்லா இருந்தது நன்றி மேடம்.

அன்புடன்
ஜாஸ்மின்.

கீரை மசியல் நன்றாக வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website