கீரை கூட்டு

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தேங்காய்துருவல் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
மோர்மிளகாய் - 6
உப்பு - சுவைக்கு


 

அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை போன்ற ஏதாவது கீரையை வாங்கி சுத்தப்படுத்தவும்.
1 டீஸ்பூன் எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, நீர் தெளித்து மூடி வேக வைக்கவும். அவ்வப்போது நன்கு மசித்து விடவும்.
தேங்காயை மிக்ஸியில் நைஸாக அரைத்து, வெந்த கீரையில் சேர்க்கவும். நீர் வற்றியதும் இறக்கி விடவும்.
மீதமிருக்கும் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து இறுதியில் மோர் மிளகாய் சேர்த்து சிவந்ததும் எடுத்து கீரையில் கலந்து சூடாக பரிமாறவும்.
சுவையான கீரைகூட்டு தயார்


மேலும் சில குறிப்புகள்


Comments

கீரை கூட்டு நான் செய்விட வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது. செய்வதற்கு சிம்பிளாக இருந்தது. நன்றி

லதா

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சுவையாக இருந்து என்ற வரிகள் மகிழ்வைத்தந்தது.மிக்க நன்றி லதா.
ஸாதிகா

arusuvai is a wonderful website