இறால் முருங்கைக்காய் குழம்பு

தேதி: April 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

இறால் - 15
தக்காளி - ஒன்று (பெரிய பழுத்த பழம்)
பெரிய முருங்கைக்காய் - ஒன்று
மாங்காய் - ஒன்று
தேங்காய் துருவல் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு


 

சிறிய இறால் கூடுதல் சுவை தரும் எனினும் இங்கு தந்தது பெரிய சைஸ் இறால், முருங்கைக்காய் நீளகாயாக இருந்தால் ஒரு 8 துண்டுகளாக்கி வைக்கவும்.
தக்காளியையும், முருங்கைக்காயையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீரும் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
முருங்கைக்காய் வெந்ததும் இறாலையும், நறுக்கின மாங்காயையும் சேர்த்து 3 நிமிடம் மூடி விடவும்.
தேங்காய் துருவலையும், சின்ன வெங்காயத்தையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தேங்காய் விழுதை வெந்த இறால் குழம்போடு சேர்த்து கிளறவும்.
அதிகம் கொதிக்காமல் நுரைத்து வரும்பொழுதே தீயை அணைத்து விடவும். தளதளவென கொதித்தால் சுவை குறையும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
மிகவும் சுவையான இறால் முருங்கைக்காய் குழம்பு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா,
முருங்கைக்காய் சாம்பார் அண்ட் இறால் ப்ரை செய்யும் ஐடியாவில் இருந்தேன்... இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரே recipeயில் கொடுத்து அசத்திட்டீங்க... :)

சுவை சூப்பர்... அதை விட செய்வது மிக சுலபம்... மிக்க நன்றி... :)

மஞ்சள்தூள், மிளகாய்தூள் அளவை தான் மிஸ் செஞ்சுட்டீங்க :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)