ஸ்ட்ரா பொம்மை செய்வது எப்படி?

தேதி: April 2, 2009

4
Average: 3.5 (8 votes)

 

ஸ்ட்ரா - 2 பாக்கெட்
நரம்பு - 20
பொம்மை - ஒன்று
லேஸ் - 2 மீட்டர்
ஊசி - 2

 

ஸ்ட்ரா பொம்மை செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள பொருளை எடுத்து கொள்ளவும். இரண்டு பாக்கெட் ஸ்ட்ராவில் தொப்பிக்கு 3 செ.மீ அளவும், சட்டைக்கு 3 1/2 செ.மீ என்ற அளவில் வெட்டிக் கொள்ளவும். இதே போல் 1 1/4 பாக்கெட் அளவு ஸ்ட்ராவை வெட்டிக் கொள்ளவும்.
ஊசியில் நரம்பை இரண்டாக கோர்த்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். பிறகு பெரிய ஸ்ட்ராவை எடுத்து அதன் முனையில் ஊசியை வைத்து ஒவ்வொன்றாக கோர்க்கவும். இதே போல் முக்கால் பாக்கெட் ஸ்ட்ராவை நரம்பில் கோர்த்துக் கொள்ளவும். ஊசியில் மற்றொரு நரம்பை கோர்த்து அதே ஸ்ட்ராவின் அடியில் உள்ள முனையில் கோர்க்கவும். (படத்தில் காண்பித்திருப்பது போல் கோர்த்து கொள்ளவும்).
வெட்டி வைத்திருக்கும் 3 செ.மீ மற்றும் 3 1/2 செ.மீ ஸ்ட்ராவை இதே போல் இரு முனையிலும் கோர்த்து கொள்ளவும்.
கோர்த்து வைத்திருக்கும் பெரிய ஸ்ட்ராவை, பொம்மையின் இடுப்பில் வைத்து பாவாடை போல் இறுக்கமாக கட்டவும். இதே போன்று கீழ் பகுதியில் இறுக்கமாக கட்டாமல் சற்று தளர்வாக கட்டவும். (பொம்மை நிற்பதற்கு தகுந்தாற்போல்)
சட்டைக்காக 3 1/2 செ.மீ அளவில் கோர்த்து வைத்திருக்கும் ஸ்ட்ராவை பொம்மையின் கழுத்தில் வைத்து மேல் பகுதியை இறுக்கமாகவும் கீழ் பகுதியை லேசாகவும் கட்டி சட்டை போல் செய்துக் கொள்ளவும்.
பொம்மைக்கு தொப்பி செய்ய 3 செ.மீ அளவில் கோர்த்து வைத்திருக்கும் ஸ்ட்ராவை மேல் புறத்தில் இறுக்கமாக கட்டிக் கொள்ளவும். பிறகு ஸ்ட்ராவின் கீழ் பகுதியை பொம்மையின் தலையின் அளவிற்கு தகுந்தாற் போல் கட்டிக் கொள்ளவும். அதன் பின்னர் தொப்பியின் அடிப்பகுதியிலும் மேல் பகுதியிலும் லேஸை வைத்து சுற்றிலும் தைக்கவும்.
பிறகு சட்டையின் கீழ் பகுதியிலும் மேல் பகுதியிலும் லேஸை வைத்து சுற்றிலும் தைக்கவும்
பொம்மையின் தலையில், செய்து வைத்திருக்கும் தொப்பியை வைத்து தலையுடன் சேர்த்து தைக்கவும்.
அழகிய எளிமையாக செய்யக்கூடிய ஸ்ட்ரா பொம்மை தயார். விருப்பப்பட்டால் பொம்மையின் பாவாடை அடியில் லேஸ் வைத்து சுற்றிலும் தைத்து கொள்ளலாம்.
இந்த அழகிய ஸ்ட்ரா பொம்மை செய்முறையை விளக்கியவர் திருமதி. சரோஜினி பன்னீர்செல்வம் அவர்கள். நாகை நகரில் 20 வருடங்களுக்கு மேலாக கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகின்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனைத் தவிர தையல் வகுப்புகளும் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பொம்மை ரொம்ப சூப்பரா செய்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.என் 6 வயது மகளுக்கு இந்த மாதிரி handicrafts செய்வதில் ரொம்ப இஷ்டம். அவளுக்கு இதை செய்ய சொல்லி கொடுக்க இருக்கிறேன்.cindrella பொம்மைக்கு கூட செய்து போடலாம் போல :-)

Do you know what is better than charity and fasting and prayer?
Its keeping peace and good relation (Prophet Muhammed -Muslim & Buhari)

சரோஜினி மேடம்,
மிகவும் அழகாக இருக்கு.. நான் பள்ளியில் படிக்கும் பொழுது எல்லாம் இப்படி எதவது செய்ய கற்று கொடுப்பார்கள்..இப்பொழுது எல்லாம் மறந்து போச்சு…
உங்களுடைய இந்த குறிப்பினை பார்த்த பிறகு செய்ய வேண்டும் என்ற ஆசையாக இருக்கின்றது.
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

சரோஜினி மேடம் ரொம்ப அழகாக இருக்கு..... என் அம்மா எனக்கு இதே மாதிரி ஸ்பான்ச்லே செல்லி குடுத்துருக்காங்க.இன்னும் நிரைய செல்லிகுடுங்க மேடம்.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சூப்பரா இருக்கு மேடம்.இன்னும் நிறைய சொல்லிக் குடுங்க.

சரோஜினி,
பொம்மை அழகாக இருக்கிறது. நீங்கள் இந்தப் பின்னூட்டமெல்லாம் பார்க்கிறீர்களா என்று தெரியவில்லை. :-) உங்கள் கை வேலைகள் எல்லாமே அழகாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.

அட்மின்,
சரோஜினி அறுசுவை உறுப்பினரா அல்லது இது நீங்கள் சேகரித்து வெளியிடும் குறிப்பா? அவர் இந்தப் பின்னூட்டங்களைப் பார்ப்பார்தானே? இல்லாவிட்டால் மீண்டும் குறிப்புச் சேகரிக்கச் சந்திக்கும்போது என் பாராட்டுக்களை சரோஜினியிடம் சேர்ப்பித்துவிடுவீர்களா? நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

திருமதி. சரோஜினி அவர்கள் அறுசுவையை பார்வையிடுவதில்லை. அவரது மகள் அவ்வபோது பார்வையிடுகின்றார் என்று நம்புகின்றேன். இவர் எங்களது தெருவில்தான் வசிக்கின்றார். எனவே உங்களது பாராட்டுகளை கண்டிப்பாக தெரிவித்துவிடுகின்றேன். எங்களது ஊரில் கைவினைப் பொருட்கள் செய்யும் பெண்களில் பெரும்பாலானோர் இவரிடம்தான் பயிற்சி பெற்றிருப்பார்கள்.

அட்மின்,
உங்கள் வேலைச் சிரமங்களுக்கு நடுவிலும் உடனே பதிலளித்தமைக்கு நன்றி.
நான் நாகை வரும்போது சரோஜினியையும் சந்திக்கலாம். :-)

‍- இமா க்றிஸ்

ரொம்ப ஈஸியான பொம்மை. அழகா செய்து இருக்கீங்க. நானும் முயன்று பார்க்கிறேன். உங்களுக்கு ரொம்ப நன்றீ

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta