தாய் ஃப்ரைட் ரைஸ்

தேதி: April 3, 2009

பரிமாறும் அளவு: (4 - 5 )நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (4 votes)

 

பாஸ்மதி அரிசி (ஊறவைத்தது) - 250 கிராம்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
கோவா(முட்டைகோஸ்) நறுக்கியது - 2 கப்
காரட் (நறுக்கியது) - ஒரு கப்
கறிமிளகாய்(குடைமிளகாய்)நறுக்கியது - ஒரு கப்
வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்
தக்காளிப்பழம் (நறுக்கியது) - ஒரு கப்
வெங்காயத்தாள் - 2
பேபிக்கான் - 4
துளசி இலை - ஒரு கட்டு
இஞ்சி நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)நறுக்கியது - 8 பல்
பச்சைமிளகாய் நறுக்கியது - 10
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - தேவையானளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்தகச்சான்(இரண்டாக உடைத்தது) - சிறிதளவு
கறிவேப்பிலை நறுக்கியது - சிறிதளவு
தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு - சிறிதளவு


 

பாஸ்மதி அரிசியை கழுவி துப்பிரவு செய்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் போட்டு வறுக்கவும்.
வறுத்த பின்பு அடுப்பிலிருந்து தாட்சியை (வாணலியை) இறக்கி வறுத்த அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் முக்கால்பகுதி தண்ணீர் விட்டு அதனை கொதிக்க விடவும்.
அடுப்பிலுள்ள தண்ணீர் கொதித்ததும் அதில் கழுவி வறுத்த அரிசியை போட்டு அவியவிடவும்.
அரிசிஅவிந்து சோறு(சாதம்) ஆகியதும் அதிலுள்ள கஞ்சியை வடித்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி(பூண்டு), இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
இவையாவும் வதங்கியபின் இதனுடன் கறிமிளகாய்(குடைமிளகாய்), கோவா(முட்டைகோஸ்), காரட், துளசி யிலை ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
இவையாவும் வதங்கிய பின்பு இதனுடன் தக்காளிப்பழம், பேபிக்கானையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின்பு அஜினோமோட்டோ, மிளகுத்துள், கறிவேப்பிலை, தேசிக்காய்(எலுமிச்சம்பழ)சாறு, பட்டர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடத்தின் பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதன் பின்பு வாயகன்ற பாத்திரத்தில் சோற்றையும்(சாதத்தையும்) வதக்கிய காய்கறிகளையும் மாறிமாறி போட்டு நன்றாக கலந்து அதன் மேல் வறுத்து இரண்டாக உடைத்த கச்சானை (வேர்கடலையை) போட்டு அலங்கரிக்கரித்த பின்பு சுவையான தாய் ஃப்ரைட் ரைஸ் தயாராகிவிடும். அதன் பின்பு அதை பரிமாறவும்.


தாய் ஃப்ரைட்ரைஸ் சுவையானது நோய் எதிர்ப்புச் சக்திநிறைந்தது கார்போஹைட்ரேட், மினரல், கரோட்டீன், வைட்டமின் ஏ,பி,சி, பொட்டாஷியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, மக்னீசீயம் போன்ற பல சத்துகள் அடங்கியது, தாய்லாந்து மக்கள் விரும்பி உண்ணும் உணவாகும் இது மிக விரைவில் சமிபாடடைய கூடியது ஆகவே இதனை செய்து பார்த்து இதன் சுவையை அறிவதுடன் இதில் காணப்படும் சத்துகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
எச்சரிக்கை - இருதய நோயாளர், துளசிஇலை, பேபிக்கான், இஞ்சி, உள்ளி(பூண்டு), கச்சான் (வேர்கடலை) அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்கள் நலமா?வீட்டில் அனைவரும் நலமா?எனக்கு தெரிந்தவரை தாய்லான்ட்டில் எந்த புட் டிலும் அஜினமோட்டோ சேர்ப்பதில்லை.எனக்கு தெரிந்த ஒரு செப் பிடம் இது பற்றி விசாரித்தபோது எனக்கு தெரிய வந்த வற்றை உங்களிடம் சொல்லறேன்..அஜினமோட்டோ கண்டிப்பாக தாய் புட்டில் பயன் படுத்த மாட்டார்கள்..அதே போல் கறிவேப்பிலையும்,பச்சை மிளகாய்யையும் பயன்படுத்த மாட்டார்கள் ப்ரைட் ரைஸ் க்கு..ஒரு வேளை நீங்கள் இதை நம் நாட்டு சுவைக்கு ஏற்றாற்போல் மாற்றி கொடுத்திருந்தீர்கள் என்றால் சரி...தவறாக நினைக்க வேண்டாம்..எனக்கு தெரிந்ததை சொன்னேன்...
அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

அம்மு நானும் என்னுடைய வீட்டில் உள்ள எல்லோரு ம் நலமாக இருக்கின்றோம்.நீங்கள் எப்படி இருக்கின் றீர்கள்?உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் நலமாக இருக்கின்றார்களா?அத்துடன் நீங்கள் கூறுவது சரி(தாய்லாந்தின் உணவுவகைகளில் அஜினமோட்டோ கறிவேப்பிலை,பச்சைமிளகாய் ஆகியவற்றை பயன் படுத்தமாட்டார்கள்)ஆனால் தாய்லாந்தின் உணவு சுவையை எல்லோரும் விரும்பி உண்பார்கள் எனக் கூறமுடியாது அதற்கு காரணம் அதன்சுவையே ஆகும் ஒரிஜினல்தாய்லாந்து உணவின்சுவை எங்கள் நாட்டின ருக்கு ஏற்றசுவையாக இருக்கவில்லை ஆகவே தான் அந்த நாட்டின் உணவுவகையான தாய்ஃபிரைட்ரைஸ் ஸின் சுவையை நம் நாட்டு சுவைக்கு ஏற்றாற்போல் மாற்றி செய்து பார்த்து அதனை சுவைத்த பின்பு அதனை நீங்கள் எல்லோரும் செய்துபார்த்து சுவைப்ப தற்காக நான்செய்துபார்த்த தாய் ஃபிரைட்ரைஸ்ஸின் குறிப்பினை கொடுத்தேன்.நீங்கள் இதனை கேட்டதிற் காக நான் உங்களை தவறாக நினைக்கவில்லை அத்துடன் வேறுஎதாவது சந்தேகம் இருந்தால் உடனடி யாக அதனை என்னிடம் கேட்டால் அதற்குறியபதிலை தருகின்றேன்,உங்களுக்கு இந்த தாய்ஃபிரைட் ரைஸ் செய்து பார்க்க விருப்பமிருந்தால் இதனை செய்து பார்த்து சுவைத்த பின்பு இதனை பற்றி எழுதவும்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

நாங்கள் அனைவரும் நலம்...நான் உங்களிடம் சந்தேகம் கேட்ட அன்னிக்கே செய்து பார்த்து விட்டேன்..கொஞ்சம் வேலை இருந்ததால் பதிவு போட முடியலை...ரொம்ப டேஸ்டியா இருந்தது...நான் சந்தேகத்தின் பேரில் தான் கேட்டேன் மேடம்,தவறா நினைக்காதீங்க...என் சந்தேகத்திற்கு உடனே பதில் போட்டமைக்கு ரொம்ப நன்றி மேடம்...சமிபகாலமாக எல்லா நாட்டு உணவுகளையும் அதன் நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு இருக்கேன்...அதனால்தான் ஒரு வேலை நான் தவறான கருத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கின்றேனோ என்று தான் கேட்டு விட்டேன்...தவறாக நினைக்காமல் பதில் போட்டமைக்கு மிக்க நன்றி மேடம்...ரொம்ப நல்லா வந்தது மேடம்...நான் கொஞ்சம் காரம் அதிகம் சமையலில் சேர்ப்பதால் உங்கள் அளவை விட கூட மிளகாய் சேர்த்துக்கொண்டேன்..தாய் நாட்டு பிளேவர்ரும் நம் நாட்டு சுவையும் சேர்ந்து ரொம்ப சூப்பர்ரா இருந்தது...
அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.