வறுத்தரைத்த பூண்டு குழம்பு

தேதி: April 6, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பூண்டு - பெரியது 1 அல்லது 15 பல்
மிளகாய் வற்றல் - 4
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1(விரும்பினால்)
தக்காளி - 1 (விரும்பினால்)
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் பூண்டை உரித்து, பெரியதாக இருந்தால் நீளவாக்கில் கட் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, தேங்காய் துருவல்,
வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் விரும்பினால் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளலாம்.
ஆறியவுடன் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். புளி, உப்பு கரைத்து அரைத்த பூண்டு கலவையுடன் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி போட்டு உடன் கரைத்த கலவையை விட்டு நன்றாக கொதி வந்ததும் சிம்மில் வைத்து, குழம்பு மணம் வந்து எண்ணெய் தெளிந்து இறக்கவும். கடலைப்பருப்பு சேர்ப்பதால் அடியில் உரையும். அடிக்கடி கிளறி விடவும்.
சூப்பர் சுவையான வறுத்தரைத்த பூண்டு குழம்பு ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை உடன் பரிமாறலாம்.


குழம்பு வைத்தவுடன் அப்படியே உள்ளங்கையில் வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும். வற்றல், புளி, எண்ணெய் வேண்டுமானால் அவரவர் தேவைக்கு கூட்டி கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாவ் ரெசிப்பி பார்க்கும் போதே செய்து சாப்பிடனும் போல் இருக்கு, அடுத்த வாரம் செய்தபின் சொல்கிறேன்.

ஆசியாக்கா இதில் ஒரு பதிவு போட்டுகறேன்..என் கணவருக்கு நிச்சயம் இதை செய்து கொடுக்கனும்..

அவசரத்துக்கு தேட முடியாது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஒருவலியாக இந்த ரெஸிபியையும் உங்க கடாய் காளானையும் செய்தாச்சு..நன்றிக்கா..ஒரு சந்தேகம் இதில் கேட்டதுக்கு மன்னிகவும்..அந்த காளான் ரெஸிபியை சேர்ச் செய்து போட முடியலக்கா பையன் மடியில்..காளானை இப்பதான் முதல் முதலாக சமைத்து இருக்கேன்..கிளீன் செய்வதே தெரியல கேட்கவும் டைம் இல்லாமல் போச்சு நான் மெலே லேசா தோல் உரிச்சு..உள்ளே கருப்பா நூல் போல இருக்கே அதை கட் பண்ணிஎட்டுத்து அப்புறமா நீங்க சொன்னமாதிரி சுடு நீரில் ஊற வைத்து போட்டேன் இப்படிதான் கிளீன் செய்யனுமா?விளக்கம் கொடுங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

முதலில் நீங்கள் வாங்கியது பட்டன் காளான் தானே,அது வெள்ளையாக பார்க்கவே அழகாக இருக்கும் அதனை இரண்டாக கட் செய்து வெந்நீரில் அலசி போடவேண்டியது தான்.காம்பு வேண்டுமானல் சிறிது கழித்து விடவும்.சில காளான் உள்ளே கருப்பாக இருக்கும்.பிடிக்கலைன்னால் லேசாக ஸ்கூப் ஔட் செய்து விடலாம்,சிப்பிக்காளான் கூட சமைத்தால் அருமையாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதில் பட்டன் காளானுதான் போட்டிருந்தது உள்ளே கருப்பா இருந்தது அது கொஞ்சம் மாதுரியாக இருந்ததால் எடுத்துட்டேன்..இதில் அப்ப பல வகை இருக்கா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஸியா, இந்த குழம்பு சூப்பர். வெங்காயம், தக்காளி வதக்கி செய்வதால் நல்ல கெட்டியாக வந்தது. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.