கார வடை

தேதி: April 6, 2009

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சரிசி -- 3/4 கப்
புழுங்கழரிசி -- 1/4 கப்
உளுந்து -- 1/4 கப்
கடலை பருப்பு -- 2 ஸ்பூன் (ஊற வைத்தது)
சிவப்பு மிளகாய் -- காரத்திற்கேற்ப
சீரகம் -- 1 ஸ்பூன்
பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
பூண்டு -- 7 பல் (மீடியம் சைஸ்)
தேங்காய் -- 1/2 மூடி (பல் பல்லாக நறுக்கியது)
வெங்காயம் -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
சோடா உப்பு -- 2 சிட்டிகை
உப்பு -- ருசிக்கேற்ப
பஜ்ஜி கலர் பொடி -- ஒரு துளி


 

அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊற வைத்து தனியாக அரைக்கவும்.
அரிசியுடன் பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவுக்கலவை, ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து அதனுடன் உப்பு, பெருங்காயம், மீதியுள்ள கறிவேப்பிலை, வெங்காயம், தேங்காய், சோடா மாவு,கலர் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவை குழிக்கரண்டியில் எடுத்து காய வைத்த எண்ணையில் போட்டு சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும்.


பச்சரிசியும் புழுங்கலரிசியும் சேர்த்து 1 பங்கு எனில் உளுந்து 1/4 பங்கு போடவும்.

மேலும் சில குறிப்புகள்