எம்போஸிங் பெயிண்டிங் செய்வது எப்படி?

தேதி: April 6, 2009

4
Average: 3.3 (3 votes)

 

எம்போஸ் பெயிண்டிங் கிட்
ப்ரஷ் - எண்.4, 3, 0

 

முதலில் ஒரு பெட்சீட்டை விரித்து அதில் எம்போஸ் செய்ய போகும் துணியை திருப்பி போட்டு அயர்ன் செய்யவும்.
அயர்ன் செய்யும் பொழுது எல்லா இடங்களிலும் படும்படி தேய்க்கவும். அப்போது தான் அதில் உள்ள டிசைன் மட்டும் சற்று மேலே உப்பினாற் போல் தெரியும்.
பிறகு ஒரு பேப்பரை எடுத்து அதில் அயர்ன் செய்த எம்போஸ் துணியை திருப்பி போட்டு நான்கு முனைகளிலும் துணியை இழுத்து வைத்து பின் செய்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கலரை வைத்து பெயிண்ட் செய்யவும். (அப்படியில்லையெனில் நாம் விரும்பும் வண்ணங்களில் பெயிண்ட் செய்து கொள்ளலாம்).
எம்போஸ் ஆகியிருக்கும் இடங்களில் மட்டும் பெயிண்ட் செய்யவும்.
அடர்ந்த டிசைனாக இருந்தால் எண்.3 என்ற ப்ரஷை பயன்படுத்தவும் அல்லது மெல்லிய டிசைனாக இருந்தால் எண்.0 என்ற ப்ரஷை பயன்படுத்தவும்.
லைட் கலர் தேவையெனில் டார்க் கலருடன் வெள்ளை நிற பெயிண்ட் கலந்து பெயிண்ட் செய்யவும். பொதுவான கலர் சிவப்பு, நீலம், மஞ்சள் (i) பிங்க் + மஞ்சள் = ஆரஞ்சு; (ii) நீலம் + பச்சை = பச்சை; (iii) பிங்க் + நீலம் = வைலட் (iv) மஞ்சள் + பச்சை = கிளி பச்சை; (v) பச்சை + ஆரஞ்சு = ப்ரெளன்; (vi) பிங்க் + நீலம் + பச்சை = க்ரே; (vii) வெள்ளை + ஆரஞ்சு = முகத்தின் நிறம்(peach)
எல்லா இடங்களில் பெயிண்ட் செய்து முடிந்ததும் எம்போஸ் துணியை அப்படியே வைத்து காய விடவும்.
எம்போஸ் துணி நன்கு காய்ந்ததும் அதை எடுத்து ப்ரேம் செய்து வைத்துக் கொள்ளவும். இதை வரவேற்பறை, ஹால் போன்ற இடங்களில் மாட்டி அலங்கரிக்கலாம். இந்த அழகிய எம்போஸிங் பெயிண்டிங்கை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. திவ்யா அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

திவ்யா உங்க எம்போஸிங் பெயிண்டிங் ரொம்ப அழகாக இருக்கிறது....

ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் ”எம்போஸ் செய்ய போகும் துணியை”ன்னு செல்லிருகீங்களே... அது துணியா?.... எம்போஸ் செய்யும் போர்ட் ஒரு அலுனினிய தகடு மாதிரிதானே இருக்கும்?.... இல்லை இப்போது இந்த மாதிரி கிடைகிறதா... கொஞ்சம் சொல்லுங்கப்பா!!!!

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

திவ்யா, மிக அழகாக இருக்கு. இது இதற்கென உள்ள துணியை வாங்கித்தான் செய்ய வேண்டுமா? நாமாக பற்றன் போட்டுச் செய்ய முடியாதோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிகவும் அருமை திவ்யா. என்க்கு ஒரு சின்ன சந்தேகம் எந்த அளவு வைத்து அயர்ன் செய்ய வேண்டும். பிறகு எம்போஸ் செய்ய போகும் துணி பெயர் எனன?

நன்றி
சரண்யா

அதிரா 10 வருடங்களுக்கு முன் நான் ஒரே ஒரு முறை செய்துள்ளேன்.அதனால் சொல்வது சரி என் தான் நினைக்கிறேன்.
வெறும் velvet துணியில் கூட வேண்டிய டிசைன் வரைந்த பின் Emboss paints எனவே உள்ளது.அதை apply பண்ணி after 24 hrs,velvet cloth-ஐ திருப்பி(back side)அயர்ன் செய்தால் டிசைன் வரைந்த side தானாகவே எழும்பியது போல் வரும்.

இப்போது Emboss solution/powder என உள்ளது.அதற்குரிய steps follow செய்து பின் fabric paints use செய்தால் போதும்.ஏனெனில் Emboss paints/colors கொஞ்சம் விலை அதிகம் என் நினைக்கிறேன்.

Patience is the most beautiful prayer!!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta