சிம்பிள் தாளிச்சா

தேதி: April 7, 2009

பரிமாறும் அளவு: 6 -8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

துவரம்பருப்பு - 100 கிராம்
கத்திரிக்காய் - 200 கிராம்
மாங்காய் - சிறியது 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
புளி - நெல்லியளவு
மல்லி பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப்பொடி - அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - அரைஸ்பூன்
சோம்பு பொடி- கால் ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரைஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு


 

குக்கரில் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து எடுக்கவும். தனியே ஒரு பாத்திரத்தில் பருப்பை எடுத்து வைக்கவும். கத்திரிக்காய், மாங்காய், தக்காளி, வெங்காயம், மல்லிலை கட் செய்து கொள்ளவும். புளி கரைத்து கொள்ளவும்.
அதே குக்கரில் கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், மிளகாய், மல்லி இலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மசாலா பொடிகள், புளித்தண்ணீர், உப்பு சேர்த்து 1 விசில் வேக வைக்கவும். திறந்து வேக வைத்தபருப்பை கத்திரிக்காய் மசாலா உள்ள குக்கரில் கொட்டி கலந்து வைக்கவும். கட் செய்த மாங்காய் சேர்க்கவும். சிம்மில் வைக்கவும். இலேசாக நடுவில் கொதி வரவும் அடுப்பை அணைக்கவும். கெட்டி சாம்பார் பதத்தில் இருக்கும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாவற்றல், கறிவேப்பிலை, வெங்காயம் சிவக்க தாளித்து பருப்பு கத்திரிக்காய் கலவையில் கொட்டவும். உப்பு, புளி சரி பார்க்கவும்.
சூப்பர் சுவையுள்ள சிம்பிள் தாளிச்சா ரெடி. இதனை பிரியாணி, நெய்சோறு, தேங்காய் பால் சோறு உடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அஸீயா மேடம்! தேங்காய் பால் சாதம் செய்து உங்க சிம்பில் தாலிசா செய்தேன் நைட்டுக்கு கூட தாலிச்சா மீதமில்லாமல் காலி ஆய்டுச்சு, நன்றி

என் கணவர் மிகவும் ருசித்து உண்டார்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு, ஆமென்