மிக்ஸ் பருப்பு வடை

தேதி: April 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பச்சைப்பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்


 

பருப்புக்களை 2 அல்லது 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
பருப்புக்களை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள பொருட்களையும், துருவிய இஞ்சியையும் சேர்த்துக் குழைக்கவும்.
வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிறிய வடைகளாகத்தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வத்சலா, இன்று இந்த வடைதான் செய்தேன் நன்றாக வந்தது. நல்ல சுவையாகவும் இருந்தது. பச்சைப்பருப்பு என்று, பயறைத்தானே சொன்னனீங்கள்? அதுதான் போட்டேன், ஆனால் உழுந்தும், பயறும் அளவில் பாதிதான் சேர்த்தேன். நல்ல மொறு மொறுப்பாக இருந்தது. இதுதான் என் முதல் பின்னூட்டம், எப்படித்தான் எல்லாம் கொடுத்துமுடிக்கப்போறேனோ தெரியாது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த மிக்ஸ் பருப்பு வடையின் படம்

<img src="files/pictures/aa291.jpg" alt="picture" />

அதிரா, மிக்ஸ் பருப்பு வடை செய்து படத்துடன் பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.படத்தை இணைத்த அட்மினுக்கும் மிக்க நன்றி. பச்சை பருப்பு என்று பயறைத்தான் குறிப்பிட்டு இருந்தேன்.நான் செய்வது போலவே வடை இருக்கிறது. மீண்டும் மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"