வெஜ்டபுள் கோதுமை தோசை

தேதி: April 7, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு)

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 3 கப்
முட்டை கோசு - 1/2 கப்
காரட் - 1/2 கப்
பீன்சு - 1/2 கப்
கீரை - 1/2 கப்
காலி ஃப்லர் - 1/2 கப்
வெங்காயம் - 1 கப்
குடை மிளகாய் - 1/2 கப்
சாட் மசாலா - வேண்டிய அளவு
மிளகு தூள் - வேண்டிய அளவு
உப்பு - வேண்டிய அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
கரிவேப்பிலை - வேண்டிய அளவு
கொத்தமல்லி தலை - வேண்டிய அளவு


 

முதலில் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன்,முட்டைகோசு,காரட்,பீன்சு,கீரை,காலி ஃப்லர்,வெங்காயம்,குடை மிளகாய்,மிளகு தூள்,உப்பு, சீரகம்,கரிவேப்பிலை,கொத்தமல்லி தலை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்கி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் கைகளிள் மாவை எடுத்து தோசை கல்லில் பரப்பி விட்டு,மேலே சாட் மசாலா தூவி,எண்ணைய் விட்டு திருப்பி போட்டு வார்த்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இரவுக்கு சில சமையம் கோதுமை தோசை செய்து இருக்கிறேன், ஆனால் இது ரொம்ப நல்லா இருக்கு காய்கறிகளுடன் ஊட்டசத்தும் கூட.

மிகவும் நன்றி.

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் மாற்றிடலாம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிக மிக நன்றி...பின்னூட்டம் தந்தமைக்கும் மிக நன்றி...
Be Happy

Be Happy

சீதா... காய்கறி சேர்த்து செய்ததில்லை. நல்ல சுவை. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா