அவரைக்காய் சைனீஸ் கூட்டு

வழங்கியவர் : julaiha
தேதி : புதன், 08/04/2009 - 02:56
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபர்கள்
- அவரைக்காய் - கால் கிலோ
- வெங்காயம் - ஒன்று
- வறுத்த காய்ந்த மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
- மேகி க்யூப் - அரைகட்டி
- கறிவேப்பிலை -ஒரு கொத்து
- எண்ணெய் - தாளிக்க
- உப்பு - அரை டேபிள்ஸ்பூன்
- மல்லிக்கீரை - ஒரு கைப்பிடி
- அவரைக்காயை ஓர் இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பாதியை போட்டு நன்கு வதக்கவும்.
- அதில் மிளகாய்தூளைப்போட்டு கிளறி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பின் அதில் மேகி க்யூபை போட்டு காயை போட்டு வதக்கி மூடியை போட்டு மூடி விடவும்
- இடையிடையில் கிளறவும் காய் வெந்ததும் மீதி வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் கிளறி மேலே மல்லித்தழை தூவி பரிமாறவும்.
Note:
மேகி க்யூப்பை தூளாக்கி போடவும் இல்லையென்றால் கட்டியாக இருக்கும்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஜுலைகா அக்கா! உங்க சைனீஸ் அவரைகாய் கூட்டு செய்தேன் மேகி இல்லை அதனால் நூடில்ஸ் பொடி சேர்த்தேன்.. நல்ல மணம்/சுவை...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
இலா, இன்று இந்த கூட்டு செய்வதற்காக காய் கட் பண்ணி வெச்சிருக்கேன். மேகி க்யூப் இல்லையே என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். நல்ல ஐடியா குடுத்திருக்கிங்க! (நூடுல்ஸ் பவுடர் என்னிடம் கொஞ்சம் இருக்கு!) தேங்க் யூ!
ஜுலைஹா அக்கா, ரெஸிப்பி டிபரெண்டா இருக்கு செய்திட்டு வந்து சொல்றேன், எப்படி இருந்ததுன்னு...
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஜுலைஹா அக்கா,
இன்று இரவு இந்த அவரைக்காய் சைனீஸ் கூட்டு செய்தேன். வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது. நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
மேகி க்யூப் என்றால் என்ன
நிஷா