பகாறா கானா

தேதி: April 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

தரமான பாசுமதி அரிசி ‍- ஒரு படி (எட்டு டம்ளர்‍)
எண்ணெய் - ஒரு டம்ளர் (200 மில்லி)
வெங்காயம் - கால் கிலோ
தயிர் - 175 மில்லி
பச்சைமிளகாய் - 8
எலுமிச்சை ‍- ஒன்று
ப‌ழுத்த‌ த‌க்காளி - ஒன்று
ப‌ட்டை - 2 அங்குல‌ துண்டு இர‌ண்டு
கிராம்பு - ஆறு
ஏல‌ம் - நான்கு
நெய் (அ) டால்டா ‍- 25 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 8 தேக்க‌ர‌ண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - ஒரு சிறிய‌ க‌ட்டு (கைக்கு இர‌ண்டு கைப்பிடி)
புதினா - சிறிய‌ அரை க‌ட்டு (கைக்கு ஒரு கைப்பிடி)
உப்பு - எட்டு தேக்க‌ர‌ண்டி (அ) தேவையான‌ அள‌வு


 

அரிசியை க‌ளைந்து 20 நிமிடம் ஊற‌ வைக்க‌வும். வெங்காய‌த்தை நீள‌வாக்கில் நறுக்கிக் கொள்ள‌வும். கொத்தம‌ல்லி மற்றும் புதினாவை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும். த‌க்காளியை இர‌ண்டாக‌ நறுக்கி வைக்க‌வும்.
ஒரு பெரிய‌ வாய‌க‌ன்ற‌ பாத்திரத்தில் எண்ணெயை காய‌ வைத்து அதில் ப‌ட்டை, ஏல‌ம், கிராம்பு போட்டு வெடித்த‌தும் வெங்காயம் சேர்த்து வ‌த‌க்கி மூடி போட்டு தீயை மிதமாக வைத்து வேக‌ விட‌வும்.
வெங்காய‌ம் சிவந்து விட கூடாது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வ‌த‌க்கி மூன்று நிமிட‌ம் அடுப்பை குறைத்து வைக்க‌வும் இதுவும் சிவற கூடாது.
இஞ்சி பூண்டு விழுது வ‌த‌ங்கிய‌தும் கொத்தம‌ல்லி, புதினா, ப‌ச்சைமிள‌காய், த‌யிர் அனைத்தையும் சேர்க்க‌வும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து க‌ருகவிடாமல் தீயை மிதமாக வைத்து வேக‌ விட‌வும்.
அதன் பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை + ஒன்று ஊற்றி கொதிக்க‌ விட‌வும்.
பின்னர் ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீரை வடித்து விட்டு இந்த கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அதனுடன் பாதியாக நறுக்கின தக்காளி, நெய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறை பிழிந்து மீண்டும் கிளறி விட‌வும்.
தீயை அதிக‌மாக வைத்து கொதிக்க‌ விட‌வும். முக்கால் ப‌த‌ம் த‌ண்ணீர் வ‌ற்றும் போது தீயை குறைத்து வைக்கவும்.
பிறகு அடுப்பின் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) தோசை த‌வ்வா (அ) டின் மூடி வைத்து ச‌ட்டியை அதன் மேல் வைத்து ச‌ரியான‌ மூடி போட்டு அத‌ன் மேல் வெயிட் (அ) சூடான‌ குழ‌ம்பு உள்ள‌ ச‌ட்டியை வைத்து 20 நிமிட‌ம் த‌ம்மில் போடவும்.
ச‌ட்டியை திற‌ந்து லேசாக‌ பிரட்டி விட்டு மற்றொரு ப‌வுளில் எடுத்து வைக்க‌வும்.
சுவையான‌ இஸ்லாமிய‌ வீடுகளில் விசேஷ‌ங்களிலின் போது செய்யும் ப‌காறா கானா ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

இதில் தாளிப்பு க‌ருகிவிட்டால் சாத‌ம் க‌ல‌ர் மாறி விடும், விசேஷ‌ங்க‌ளில் பாதி எண்ணெய், மீதிக்கு டால்டா நெய் என்று சேர்ப்பார்க‌ள், அது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு சேர்த்து கொள்ள‌வும். இந்த‌ ப‌காறா கானாவிற்கு சைட் டிஷ்ஷாக க‌றி உருளை குருமா, வெஜ் தால்சா, சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌ன் ஃப்ரை, ஊறுகாய், அப்ப‌ள‌ம், வெங்காய‌ முட்டை, மிட்டாகானா (அ) கேசரி பொருந்தும். இது இஸ்லாமிய இல்ல கல்யாணங்களில் செய்வது, அனைத்தும் விசேஷ‌த்தில் வைப்ப‌து. இதற்கு சிக்கன் குருமா, மீன் குழம்பும் கூட பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அடிக்கடி பகாறா கானா என்று நீங்கள் சொல்ல கேட்டு இருக்கின்றேன் .இப்போது குறிப்பு கொடுத்து விட்டீர்கள்.பார்க்கவே அழகாக இருக்கிறது.சூப்பராக அசத்துகின்றீர்கள் ஜலீலா.வரும் வெள்ளி அன்று எங்கள் வீட்டில் பகாறா கானாவும் மட்டன் சால்னாவும்தான் .டேஸ்ட் பண்ணி பார்க்க வேண்டுமானால் பிளைட் பிடித்து வாருங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அசத்திட்டிங்க. நானும் ரொம்ப நாளா எதிர்பார்த்து கொண்டிருந்தேன். ஜலீ எப்ப போடுவிங்க என்று.
குட் பார்க்க ரொம்ப நன்றாக இருக்கு இந்த சண்டே
செய்துட்டு சொல்கிறேன். ஒரு டவுட் நான் அரிசியை தனியாக ரைஸ் குக்கரில் வேகவைத்து செய்யலாமா?இல்ல இதை குக்கரில் எல்லாவற்றோடும் போட்டு எத்தனை விசில் விட வேண்டும்?
இதற்க்கு சைட் என்ன காம்பினேஷன் ஜலீ சொல்லுங்க.

ஸாதிகா அக்கா
ஆகா தெரிந்திருந்தால் முதலில் மட்டன் சால்னா அனுப்பி இருப்பேனே உஙக்ளுக்காகவே எவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்புகீறேன்.

ஜலீலா

Jaleelakamal

விஜி இதை ரைஸ் குக்கரில் செய்வது ரொம்ப எளிது சீக்கிரம் ஆகி விடும், அது நிறைய என்பதால் அவ்வளவு பெரிய ரைஸ் குக்கர் என்னிடம் இல்லை..

நான் படத்தில் காண்பித்த படி அப்படியே ரைஸ் குக்கரை அடுப்பில் வைத்து தாளித்து தண்ணீர் மட்டும் சரியாக ஒன்ன்றுக்கு ஒன்னறை ஊற்றுங்கள், ஊற்றி ரைஸ் குக்கரை குக் ஆன் செய்து கொதித்து மேலே கொஞ்சம் தண்ணீர் நிற்கும் போதே கீப் வார்ம் மாற்றி விடுங்கள் ஒரு பத்து நிமிடம் கழித்து செட் ஆகிடும். அந்த சூட்டிலே அதான் தம் போடுவது.

இதற்கு சைட் டிஷ் வெஜ் தாளிச்சா கொடுத்து இருக்கேன் பாருங்கள் படத்துடன்.
ஏதாவது பிரை கருனை , அல்லது உருளை, அப்படி இல்லை புளி குழம்பு (அ வத்த குழம்பு, இல்லை மொச்ச கொட்டை புளி குழம்பு, கருனை கட்லெட் (அ) வடை இல்லை வெரும் பிளெயின் தாலும் நல்ல இருக்கும், அட அது கூட வேண்டாம் கொத்துமல்லி (அ) புதினா துவையல் போதும்.

இது போதுமா விஜி?

ஜலீலா

Jaleelakamal

பகாரா கானா அல் ஐன் வரை மணக்குது.சூப்பர்.அப்படியே சும்மாவே கையில் பிடித்து சாப்பிட்டுவிடலாம்.இப்படி ஆசையை தூண்டி விடலாமா?நம்ம ஊரில் நேச்சை சோறு என்று தருவாங்களே,இதே மாதிரி தான் இருக்கும்.மஜ்லிஸ் போய்விட்டு மாமா கொண்டு வரும் சாப்பாட்டிற்காக எவ்வளவு நேரம் ஆனாலும் வெயிட் பண்ணுவேன்.அதன் ருசியே(பகாரா கானா) தனிதான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனக்கு இது மிகவும் பிடிக்கும்.பார்க்கும்போதே சாப்பிடத்தோனுதே
இதை பிரஷர் குக்கரில் செய்தால் எத்தனை விசில் வைக்கவேண்டும். ப்ளீஸ்
susithra

food

டியர் சுசித்ரா

குக்கரிலும் நிமிஷத்தில் சமைக்கலாம் , இதற்கும் தண்ணீர் நான் மேலே குறிப்பிட்ட படியே செய்து குக்கரில் அப்படியே தாளித்து தண்ணீர் அள‌ந்து ஊற்றி கொதி வந்ததும் அரிசி தட்டி கொஞ்சம் நேரம் நல்ல கொதிக்க விடுங்கள்.
முக்கால் பாகம் கொதித்து வரும் போது இரண்டு விசில் விட்டு முன்றாவது விசில் வரும் போது இரக்கி விடுங்கள்.
வெயிட் போட்டதும் தீயை மீடியமாக வையுங்கள்.
விசில் வந்து ஆஃப் பண்ணதும் ஆவி அடங்கியதும் உடனே திறந்து பிறட்டி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிவிடுங்கள் , இல்லை என்றால் சிறிது நேரம் கழித்து கிரிப் ஆகி எல்லாம் ஒட்டு கொள்ளும்.
ஜலீலா

Jaleelakamal

டியர் ஆசியா நீங்கள் சொல்லும் போதே நல்ல இருக்கு ஊரில் நேர்சை சாப்பாடு சாப்பிடனும் போல், அது ப்ரிய தேக் ஷாவில் 5 படி 6 படி ஆக்குவார்கள், அந்த டேஸ்டில் செய்வது ரொம்ப கடினம்.
உங்கள் குறிப்பில் உள்ள கேக் வகைகளை பார்த்து வைத்துள்ளேன். ஆனால் செய்ய நேரம் தான் கிடைக்க வில்லை.பிள்ளைகள் அல் அயின் ஸ்கூல் பிடிச்சிருக்காமா? எந்த ஸ்கூல்.
பக்கத்தில் யாரும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?

ஜலீலா

Jaleelakamal

ஜலீலக்கா பகாரா காணா ரொம்ப அருமை..கொஞ்சம் நம்ப நோன்பு கஞ்சி சுவையில் இருக்கு...நேற்று எதுவும் இல்லை என்ன செய்யலாம் என்று யோசித்து பகாரா கானா,பருப்பு குழம்பு, அப்பளம் ,காலிஃப்லவர் வறுவல் செய்தேன்..சூப்பராக இருந்தது...ஒரே ஒரு கப் ஒரே ஒரு நேரம் தான் இருந்தது

பகாறா காணா சூப்பர். ஆசியாக்கா சொல்வது ஊரில் எனக்கும் நேரிச்சை சோறு நியாபகம் வந்து விட்டது. இதன் ருசியே தனிதான். தளி நோம்பு கஞ்சி சுவையா? இல்லப்பா. இதன் டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா சூப்பரா இருக்கும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஜலீலாக்கா நீங்க அடிக்கடி சொல்ல கேட்டு இருக்கிறேன் பகாறா கானானு படத்துடன் பார்க்கும் பொழுது நல்லா இருக்கு இன்ஷாஅல்லாஹ் நாளைக்கு செய்து பார்க்கிறேன்

ஜுலைஹா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

இன்று தான் மகனுக்கு அட்மிஷன் முடிந்தது.அல்-ஐன் ஜுனியர் ஸ்கூல்,cbse,british curriculam இரண்டும் இருக்கு.மகன் cbse.group maths,computer science,physics,chemistry.school reopening 13 th april.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று உங்கள் பகறாகானா..அடடா..வித்தியாசமான சுவையில் இருந்தது.படம் எடுத்து இருக்கின்றேன்.விரைவில் அட்மினுக்கு அனுப்பி வைக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தனிஷா, ஜுலைகா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றீ.

தளிக்கா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி, என்ன நோன்பு கஞ்சி ஏன் நீங்கள் தேங்காய் பால் ஊற்றி செய்தீர்களா?

ஸாதிகா அக்கா செய்து பார்த்து சுவைத்து போட்டோவும் எடுத்தாச்ச ரொம்ப சந்தோஷம்.

ஜலீலா

Jaleelakamal

அக்கா எப்படி இருக்கீங்க?இன்று எங்கள் வீட்டில் உங்களுடைய பகாரா காணா செய்தேன்!அருமையா இருந்தது,எனது செய்முறையில் சிறிது மாற்றம்.அதாவது பச்சை மிளகாய்,தக்காளி,எழுமிச்சை இவை சேர்த்தது இல்லை!உங்களுடைய செய்முறைய்யும் நல்லா இருக்கு!இதற்க்கு மட்டன் தால்ச்சாவுடன் நல்லா இருந்தது நன்றி அக்கா!!!!

பஹாரா கானா ரொம்ப நன்றாக இருந்தது. இன்று அது தான் செய்தேன்.

ரஸியா, விஜி பகாறா கானா செய்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

ரஸியா இது பல விதமாக செய்யலாம், அதில் இதுவும் ஒரு வகை.

இந்த சாப்பாடு பார்க்க கலர் மாறாமல் வெள்ளை வெளேருன்னு இருக்கனும்.

ஜலீலா

Jaleelakamal

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. சாதிகா அவர்கள் தயாரித்த பகாறா கானாவின் படம்

<img src="files/pictures/aa194.jpg" alt="picture" />

படத்தை வெளியிட்ட அறுசுவை நிர்வாகத்துக்கு என் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹஹஹா ஜலீலக்கா எப்டி கரெக்டா கண்டுபுடிச்சீங்க தேங்காய்ப்பால் சேர்த்தேன்,..ஹிஹிஹீ..சூப்பராக இருந்தது

எனக்கு தெரியும் தேங்காய் பால் சேர்த்தால் அது ஒரு ருசி, தக்காளியை முதலே தாளிப்பில் போட்டு தாளித்தால் அது ஒரு லைட் ரோஸ் கலாரில் வரும் சாதம், இது பளிச்சின்னு வெள்ளை வெளேருன்னு இருக்கும்.

Jaleelakamal

ஸாதிகா அக்கா ரொம்ப சந்தோஷம் உடனே செய்து போட்டோ எடுத்து அனுப்பியதற்கு.
பார்க்கவே அசத்தலா இருக்கு.

Jaleelakamal

ஜலீலாக்கா நலமா நான் பகாறா கானா அப்பொழுதே செய்துவிட்டேன் ஆனால் பதிவுதான் போடமுடியவில்லை என் கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்யாமல் இருந்தது அதுதான் உங்களுக்கு மெயில் கூட பண்ணவில்லை தாமதமாக பதுவு போடுகிறேன் மிகவும் நன்றாக இருந்தது அக்கா ரொம்ப நன்றி

அன்புடன்
ஜுலைஹா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அன்புள்ள ஜுலைகா நலமா?

பிள்ளைகள் நலமா? பகாறா கானா செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
பரவாயில்லை மெயில் போட்வில்லை என்றால் உங்கள் பிராப்ளம் தான் எனக்கு தெரியுமே?

ஜலீலா

Jaleelakamal

நேற்று இரவு ஜலீலாக்காவின் பகாறா கானா செய்தேன் சுப்பர் டேஸ்ட். வாரத்தில ஒரு முறை பகாறா கானா செய்வதால் தனியா ஒவ்வொரு முறையும் பின்னூட்டம் போடுவதில்லை. என் கணவருக்கே இது எப்படி செய்யன்னு தெரியும் :))லாங்டிரிப் போன போதும் பிரெண்ட் இது தான் வேணும் என்று செய்ய சொல்லி செய்தேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜலீ, நீங்க சொன்ன முறைப்படியே எண்ணெய் மட்டும் கொஞ்சம் கம்மியாக சேர்த்து செய்தேன். வெள்ளை வெளேரென்று பார்க்கவே அழகா ரொம்ப நன்றாக இருந்தது. நேற்று எங்க வீட்டில் நடந்த விருந்தில் சூப்பர் ஹிட் ஆகி விட்டது. நன்றி உங்களுக்கு. மறுநாள் இன்னும் நன்றாக இருந்தது.

ஜலீலா அக்கா!!! வாரம் ஒருமுறையாவது செய்துவிடுவேன்... சிம்பிள் ஆனாலும் டேஸ்டி.... தீபாவளிக்கு மறுநாள் செய்தேன்.. சூப்பர் வழக்கம் போல.. எங்க வீட்டில யாராவது போன் செய்தா.. என்ன சாப்பாடு?? பகாறா கானா ந்னு சொன்னா .. இதுக்கு எங்கூர்ல தாளிச்ச சோறுன்னு சொல்லுவாங்கன்னு கிண்டல் செய்வாங்க.. எப்பவும் எனக்கு பகாறா கானா தான்.... சின்ன குழந்தைகளும் விரும்பி சாப்பிடுறாங்க... உங்க அருமையான ரெஸிபிக்கு மீண்டும் நன்றி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா , வினி பகாறா கானா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு ரொம்ப சந்தோஷ்ம், இது இஸ்லாமிய இல்ல சூபர் ஹிட் சாதம்.
ஒரு விஷேஷம் என்றால் இது இல்லாமல் இருக்காது,
இதுவும் , பிரியாணியும்.

Jaleelakamal

ஜலிலா மேடம், பகாறா கானா செய்ய மிக மிக எளிமையாக இருந்தது. வெள்ளையாக பார்க்கவே அசத்தலாகவும் டேஸ்ட் ஆகவும் இருந்தது.உங்க வெஜ் தால்சா உடன் சாப்பிட அருமையோ அருமை... இதற்கும் படம் எடுத்து அனுப்பியுள்ளேன். குறிப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

ஜலிலா அக்கா,
ரொம்ப நாளாவே செய்யவேண்டுமென்று நினைத்திருந்த உங்க பகாறா கானா & வெஜ் தாளிச்சா நேற்று டின்னருக்கு செய்தேன். அப்படியே வெள்ளை கலர்ல , ஆங்காங்கே தெரியும் சிவப்பு (தக்காளி), பச்சை(ப.மிளகாய்) கலர்களோடு, பார்க்கவே ரொம்ப அழகா,..சிம்ப்ளி சூப்பர் போங்க!.

தாளிச்சாவும் சேர்ந்து, செம காம்பினேஷன்! பகாறா கானா, ரொம்ப டேஸ்ட்டியா இருந்தது அக்கா. என் மகளுக்கும் ரொம்ப பிடித்திருந்தது. 'ஐ லைக் இட்' அம்மா, என்று சொல்லி சாப்பிட்டாள்!. சாதம் என்றாலே சாப்பிட மறுக்கும் என் சின்ன பையனும், நான் ஊட்டிவிட விட‌ ஒன்னும் சொல்லாமல் சாப்பிட்டுவிட்டான்!!. அப்படினா அவனுக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம்! :) இனி அடிக்கடி செய்திடுவேன். அருமையான குறிப்புக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

பகறா கானா வெஜ் தால்சா செய்து பார்த்து பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி சுஸ்ரீ.

இது எல்லோரும் ரொம்ப பிடிக்கும். அப்படியே வெறும் சாப்பாட்டையே பிடித்து சாப்பிட மணமா நல்ல இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு பிடித்த்து எனக்கு ரொம்ப சந்தோஷம்.

Jaleelakamal

அன்பு ஜலீலா,

உங்க குறிப்பிலிருந்து பகாறா கானாவும் வெஜ் தாளிச்சாவும் செய்தேன். எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது.

வெஜ் தாளிச்சா குறிப்பிலும் பின்னூட்டம் கொடுத்திருக்கேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஜலீலாக்கா நல்லாருக்கீங்களா? இன்று உங்க பகாறா கானா, வெஜ் தாளிச்சா செய்தேன். சூப்பரா இருந்தது. ரொம்ப நல்லா சுவையா இருந்தது. உங்க சுவையான குறிப்புக்கு நன்றி.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.