மரவள்ளிக்கிழங்கு பூசணிக்காய் கறி

தேதி: April 8, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம்
பூசணிக்காய் - 200 கிராம் (சர்க்கரைப் பூசணி)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி


 

மரவள்ளிக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய மரவள்ளிக்கிழங்கு, பூசணி, வெங்காயம், மிளகாயை இரண்டாக கீறி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கிழங்கு 1/2 பங்கு வெந்ததும் மிளகாய்த்தூளை சேர்க்கவும்.
நன்கு கிழங்கு வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கி மசித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெட்டிய சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் பொரிந்து வரும் போது காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் இறக்கி மரவள்ளிக்கிழங்கு கறியில் கொட்டி கிளறி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வத்சலா, நேற்றுத்தான் இந்தக் கறியை நினைத்தேன், கூட்டாஞ்சோறில் இருப்பதாகத் தெரியவில்லை, சமைத்து யாரும் சமைக்கலாமுக்கு அனுப்பலாமோ என்று. நீங்க அப்படியே சொல்லிட்டீங்க. ஊர்க்கறியாயிற்றே, தலைப்பைப் பார்த்ததும் ஓடிவந்தேன். எனக்கிது நல்ல விருப்பம். எங்கள்,கந்த சஷ்டிப் ...பாறணைக்கு கட்டாயம் இது இடம்பெறுபவது வழக்கம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, நானும் விரத நேரங்களில் இக் கறி சமைப்பேன். கந்த சஷ்டிப் ...பாறணைக்கு கட்டாயம் இது நானும் சமைப்பேன்.மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வத்சலா இக்கறி செய்தேன் ... நீண்ட நாட்களின் பின் செய்தேன் ஆசையாக இருந்தது. இங்கு சக்கரைப்பூசணி பெரும்பாலும் கிடைப்பதில்லை எனவே டுபாய்ப் பூசணியில்தான்(butter nut) செய்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த மரவள்ளிக்கிழங்கு பூசணிக்காய்க்கறியின் படம்

<img src="files/pictures/aa290.jpg" alt="picture" />

அதிரா, மரவள்ளிக்கிழங்கு பூசணிக்காய்க்கறி செய்து பார்த்து, படமும் எடுத்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.படத்தை இணைத்த அட்மினுக்கும் மிக்க நன்றி.படம் சூப்பராக இருக்கிறது.

இங்கு கோடை காலத்தில் சர்க்கரைப் பூசணி செய்வார்கள். தோட்டத்திலேயே வைத்து விற்பார்கள்.
நாங்கள் வாங்கிவந்து வெட்டி ஃபிரீசரில் போட்டு விடுவிவேன்.தேவையான போது எடுத்து சமைப்பேன்.
டுபாய் பூசணிக்காயும் இதற்கு நன்றாகத்தான் இருக்கும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"