உருளை கிழங்கை மைக்ரோ அவனில் சுலபமாக வேக வைக்கும் முறை

வழங்கியவர் : gandhiseetha
தேதி : புதன், 08/04/2009 - 18:50
ஆயத்த நேரம் : 1 நிமிடம்
சமைக்கும் நேரம் : 3 நிமிடம்
பரிமாறும் அளவு :
- உருளை கிழங்கு - 3
- திஸ்யு பேப்ப்ர் - 3
- உருளை கிழங்கை நன்றாக தண்ணீரில் கழுவி துணியால் துடைக்கவும்.
- பின் திஸ்யு பேப்ப்ரால் உருளை கிழங்கை மூடி அவன் தட்டில் வைக்கவும்.
- பின் மைக்ரோ அவனை 90% பவரில் 3 நிமிடம் வைக்கவும்.
- பின் அவனை நிருத்தி விட்டு. 10 நிமிடம் கழித்து கிழங்கை எடுக்கவும்.
- வேக வைத்த கிழங்கு தயார்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஹாய் காந்தி மேடம் நலமாக இருக்கின்றீர்களா..?
இரண்டு நாட்கள் முன்பு இந்த குறிப்பை பர்த்தேன்.
இன்று அவசரமாக ஆலு பாஜி செய்ய வேண்டி வந்தது. இந்த முறையில் வேக வைத்து பயன்படுத்தினேன்.
நிஜமா எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.எவ்வளவு சுலபமாக இருந்தது.சாப்பிட்டு முடியும் வரை மனதிற்க்குள் உங்களை வாழ்த்திக் கொண்டிருந்தேன்.
அவசரத்திற்க்கு ஏற்ற குறிப்பு.உடனே என் தோழிகளுக்கும் தெரிவித்து விடுவேன்.அதற்க்கு முன் என் நன்றியை உங்களுக்கு தெரிவிக்கலாமென வந்தேன்.நல்ல பயனுள்ள குறிப்பை தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்,வாழ்த்துக்களும்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அடடா! இப்போதான் பார்க்கிறேன்.
நான் முன்பு 'சமைத்து அசத்தலாம்' பகுதிக்காக இந்த முறையை முயன்று பார்த்து இங்கு பின்னூட்டமும் போட்டேன் காந்தி. காணோம். :)
என் கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு அப்சராவுக்கு நன்றிகள். :)
எனக்குக் கிழங்கு வெடித்துச் சிதறி விடுமோ என்ற பயம் இருந்ததில் கத்தியால் ஒரு கோடு இழுத்து விட்டு வைத்தேன். சிறிய கிழங்குகளாக வைத்ததாக ஞாபகம். அளவாக வெந்திருந்தது.
மேலே ஒரு X கீறிக் கொண்டு கார்லிக் மாஜரின், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் தூவிச் சாப்பிட்டேன். யம்.
இமா
இமா
அன்புள்ள இமாவிற்கு மிக்க நன்றி.நிச்சயம் வெடிக்காது.பயம் வேண்டாம். நீங்கள் சாப்பிட்ட விதத்திலேயே நானும் சென்று முயற்ச்சிக்கிறேன்.ஏனென்றால் நீங்கள் சொல்லிய விதமே சாப்பிட தூண்டுகிறது.மீண்டும் பின்னூட்டம் தந்தமைக்கு மிக மிக நன்றி.
Be Happy
Be Happy
அன்புள்ள அப்சரா, மிக்க நலம். செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. மிக்க சந்தோசம்,தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள் பல பல..நன்றி...
Be Happy
Be Happy
hi gandhiseetha,
i tried this method of mw aaloo baking,its very fast,time saving&useful.thank u.
Kala
hi kala...
thks 4 ur comments...
Be Happy
Be Happy
காந்தி சீதா,
உருளைக்கிழங்கை இம்முறையில் வேக வைத்ததால் சமையல் சீக்கிரம் செய்து முடித்து விட்டேன். நல்ல பயனுள்ள குறிப்பு.வாழ்த்துக்கள்.