க்ளாஸ் பெயிண்டிங் செய்முறை - 2

தேதி: April 9, 2009

4
Average: 3.9 (7 votes)

 

ட்ரேஸ் எடுக்க ஏதாவது ஒரு டிசைன் (பூக்கள் அல்லது பொம்மைகள்)
கண்ணாடி - 10 செ.மீ x 12 செ.மீ
கருப்பு நிற லைனர்
கிளாஸ் கலர்ஸ் - விரும்பிய கலர்கள்
க்லிட்டர்ஸ் (Glitters) - வெள்ளை

 

கண்ணாடியின் அளவிற்கேற்ப ஒரு பேப்பரை எடுத்து அதில் விருப்பமான டிசைனை வரைந்து கொள்ளவும். அல்லது டிசைன் உள்ள பேப்பராக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் கிளாஸ் பெயிண்டிங் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
டிசைன் உள்ள பேப்பரை அடியில் வைத்து அதன் மீது கண்ணாடியை வைக்கவும். அடியில் இருக்கும் டிசைன் கண்ணாடியின் வழியாக தெரியும்.
அதன் மேல் கருப்பு லைனரை வைத்து டிசைன் முழுவதும் அவுட்லைன்(outline) கொடுக்கவும். அவுட்லைன் கொடுக்கும் பொழுது ஏதேனும் தவறாக கொடுத்து விட்டால் அவை காய்ந்த பிறகு சுரண்டி எடுத்து விடவும்.
வரைந்திருக்கும் பூ மற்றும் வண்ணத்திபூச்சியின் நடுவில் மட்டும் வெள்ளைநிற க்லிடர்ஸ்(white glitters) வைக்கவும்.
பிறகு விரும்பிய வண்ணங்களில் கிளாஸ் கலரை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பூவிலும் கலர் கொடுக்கவும். மெதுவாக பாட்டிலை அழுத்தி பூ முழுவதும் கலர் பரவும்படி கொடுக்கவும். கலர் கொடுக்கும் போது பப்புல்ஸ்(bubbles) ஏதேனும் வந்தால் உடனே ஊசி அல்லது குச்சியை வைத்து உடைத்து விடவும்.
இதே போல் வண்ணத்துப்பூச்சிக்கும் விரும்பிய கலரை கொடுக்கவும்.
இலைகளுக்கு கலர் கொடுக்கும் போது ஒரு பாதியில் பச்சை நிறமும் மற்றொரு பாதியில் மஞ்சள் நிறம் கொடுத்து ப்ரஷை வைத்து நடுவில் மட்டும் இரண்டையும் சேர்த்து விடவும்.
எல்லாவற்றிற்கும் கலர் கொடுத்து முடிந்ததும் ஒரு நாள் முழுவதும் காய வைக்கவும். பிறகு கண்ணாடியை திருப்பி வைத்து ப்ரேம் செய்து சுவரில் மாட்டவும்.
வெள்ளை பேப்பருக்கு பதிலாக சில்வர் ஃபாயில்(silver foil) பேப்பரை வைத்து நான்கு ஓரங்களிலும் ஒட்டிவிட்டு ப்ரேம் செய்யவும். இந்த அழகிய க்ளாஸ் பெயிண்டிங்கை செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா வரைந்திருக்கிங்க.படம் ரொம்ப சூப்பரா இருக்கு.

மிகவும் அழகாக இருக்கிறது. செய் முறையும் சுலபமாக இருக்கு. பிரஷ் இல்லாமலே பெயிண்டை ஊத்த வேண்டும் நேரடியாக அப்படித்தானே? நன்றாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நிஜமாக ரொம்ப பளிச்சுன்னு இருக்கு.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்கள் கைவண்ணம் மிக மிக அருமை. மிகவும் அழகாக இருக்கிறது.
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta