மொரு மொரு கோழி தொடை கறி அவனில்.

image

வழங்கியவர் : gandhiseetha

தேதி : வியாழன், 09/04/2009 - 20:53

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3.2
5 votes
Your rating: None
 

 

  • கோழி தொடை - 2
  • வெண்ணெய் - 5 தேக்கரண்டி
  • பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • சீரக தூள் - 1 தேக்கரண்டி
  • தனியா தூள் - 2 தேக்கரண்டி
  • பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி
  • மைதா - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • முட்டை - 2
  • பிரட் தூள் - தேவையான அளவு

 

  • கோழியை ஃபோர்க் ஆல் குத்தி விட்டு,தண்ணீர் இல்லாமல் திஸ்யு பேப்பரில் துடைக்கவும்.
  • பின் அதனுடன் வெண்ணெய்,பூண்டு விழுது,மிளகாய் தூள்,சீரக தூள்,தனியா தூள்,பட்டை தூள்,மைதா,உப்பு சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஃபிரிட்ஜில் வைக்கவும்,அல்லது 5 மணி நேரம் வெளியில் ஊற வைக்கவும்.
  • பின் முட்டையை உப்பு மற்றும் மிளகாய் தூளுடன் நன்கு அடித்து கொள்ளவும்.
  • பின் கோழியை முட்டையில் தடவி,பிரட் தூளுடன் உருட்டி அவன் தட்டில் வைக்கவும்.
  • பின் மைக்ரோ அவனை 200 டிகிரியில் கன்வெக்சன் மோடில் முன் சூடு(preheat) செய்யவும்.
  • பின் தட்டில் வைத்த கோழியின் மேல் வெண்ணெய் தெளித்து அவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்யவும்.
  • பின் வெளியில் எடுத்து கோழியை திருப்பி விட்டு வெண்ணெய் தெளித்து மறுபடியும் 20 நிமிடம் வைக்கவும்.
  • சுவையான மொரு மொரு கோழி கால் தயார்.

Note:

அவனுக்கு அவன் நிமிடங்கள் வித்தியாச படும். பார்த்து செய்யவும்.







அன்புள்ள காந்தி, இன்த வறுவல் மிகவும் சுவையாகவும் மொருமொருவென்றும் இருந்தது. எண்ணையில் பொரிக்கவும் தேவையில்லை... விருந்தினரும் என் கணவரும் மிகவும் விரும்பி உண்டணர்... மிக்க நன்றி
- ப்ரியா

அன்புள்ள ப்ரியா தாங்கள் செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக மிக நன்றி ப்ரியா...
Be Happy

Be Happy