ஈஸி தக்காளி மிளகு ரசம்

தேதி: April 10, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

தக்காளி - 2
பூண்டு - 4 பல்
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
புளி - கொஞ்சம்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


 

தக்காளி பொடியாக நறுக்கவும்,புளி இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
தக்காளி,தோலுடன் பூண்டு, சீரகம்,மிளகு,காய்ந்த மிளகாய் எல்லாம் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
புளி தண்ணீரில், அரைத்த விழுது, மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் ஆஃப் பண்ணவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயப்பொடி,கருவேப்பிலை தாளித்த சேர்க்கவும்.
இதோ சுவையான ஈஸி தக்காளி மிளகு ரசம் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு. நானும் இதே போல் சிறிது மாறுபட்டு செய்வேன்.

நன்றி.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

dear mythili,

thank you for this easy method of making rasam. if you could add pictures that will be more easier for everyone.

உங்க ஈசி தக்காளி மிளகு ரசம் செய்தேன்.ரொம்ப நல்லா,வாசமா இருந்தது.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

மைதிலி, சென்ற வாரத்தில் உங்கள் குறிப்பினை செய்து பார்த்தேன். பெயறுக்கேற்றார் போல் எளிதில் செய்யக் கூடிய ரசம்தான். நல்ல மணமாகவும் மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.