Experience from pple who moved from abroad to India. Topic: BEST LIFE IS LIVING IN ABROAD/INDIA.

Hi all,

Lets all share the moving experiences from abroad to India.
I am Parineeta from US. We have a group of friends here and we all talk about settling in India. Sometimes they say they wanted to settle here and sometimes they don't. Some pple take life as it comes, they don't care about going back, buy houses here and settle. But we r not like that we always like to go back. I don't know how our day to day life will be in India as I'm out of country for many years. Initially, I didn't want to live here for more than 3 yrs but then now slowly I got used to US life here and my mind also swings to move or not in near future. Actually we got bored of this life and feel like going back but hesistating to do so. But on the other end, I don't want to live here in US for long long years, feel like missing something. I sometimes feel that my son is also missing everybody from my family and growing alone with no link with my relatives,families and so on. We don't know what to decide in near future. We got stuck to this lifestyle. Think I don't want to live here until my son completes his school or college. I also think a lot abt the culture here. I want my kid to grow with our indian culture.

I always wanted to go back to India. Can anyone share their experiences how you felt moving from abroad to our own country ie, your kid's school life, day to day life...? I really appreciate this. This can help us to make some decisions eventually.

Most of my friends also say that they would like to go back but something is hesitating.

Come on friends lets all chat/argue about this topic and I believe that many pple will be in my situation and we all need your valuable comments and experiences.

Thanks,
Parineeta

Hello Parineeta, this is uma(check my profile).can u speak/read tamil?dont mind.I would like to tell something.when i started to post topics i used to do in English,there was no response for long time.Then i started in English.
I really interested to write on ur topic,so let me know about the language wheather it is Tamil or English.

Bye uma.

ஹாய் பரிநீதா

ரொம்ப நல்ல கேள்வி. நான் இப்போ தான் இங்கே வந்தேன், அதனால எனக்கு சொல்லத்தெரியலை... எனக்கு இப்போதைக்கு இங்க வந்த வேலை முடிஞ்சவுடனே திரும்பி ஓடிடனும்ன்னு தான் இருக்கு, ஆனா நிறைய பேர் சொல்வாங்க கொஞ்ச வருஷம் இங்கயே தங்கிட்டா திரும்பி போக முடிவு பண்ணுறது கஷ்டம்ன்னு. நீங்களும் dilemma ல இருக்கீங்க.... கண்டிப்பா இங்க உள்ள வசதிகளை அங்க எதிர்பார்க்க முடியாது, ஆனா அங்க உள்ள சொந்தங்கள் இங்க கிடைக்க மாட்டாங்க... புலம் பெயர்ந்து வாழும் பலருக்கும் இந்த நிலை இருக்கும். என் தோழி ஒருத்தி சொன்னா - இப்போ கிரீன் கார்ட் இருக்கு, இன்னும் கொஞ்ச நாளானா சிடிசன் ஆயிடுவோம், அதனால அதுக்கப்புறம் போயி ஊர்ல இருந்து பார்த்துட்டு முடியலைன்னா திரும்பி வந்துருவோம்ன்னு - இது அவங்களோட முடிவு. உங்களுக்கு இது ஒத்து வருமான்னு தெரியலை.........

பார்ப்போம் எல்லோரும் என்ன சொல்லுறாங்கன்னு !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

Hi uma,

I know tamil but i don't know how to type in tamil here. I tried but taking so much time to type in tamil as well. I expect your comments here. Plz go ahead

நன்றி பரினீட்தா...

நல்லதொரு தொரு தலைப்பு தான் நீங்கள் தொடங்கியிருப்பது.
நான் கூறும் அனத்தும் என் ஒருத்தியை மட்டுமே பொருத்த,என் சொந்த கருத்துகள் மட்டும் தான்.அதனால் எதையும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
1)முதலில் நாம் யருக்காக வாழ்கிறோம் என யோசிக்க வேண்டும்.சமுதாயம் என்ற மக்களிடம் நமக்கு எப்பவுமே ஒரு கவனம் தேவை.அவர்கள் என்ன சொல்வார்களோ? ஏதாவது பேசுவார்களோ என்ற தயக்கம் எப்பவும் இருக்கக்கூடாது.
2)நாம் நமக்காக வாழ்கிறோமானால் நம் குழந்தைகள் குடும்பம் பற்றி மட்டுமே யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
3)நம் விருப்பங்கள் எப்படி இருந்தாலும் குழந்தைகள் என வரும் போது அவர்கள் எங்கே குடியுரிமை பெற்றவர்கள்? எங்கே வாழ விரும்புகின்றனர் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
4)சில காலம் வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் விரும்புவது,இதேப்போல் நம் நாட்டிலும் பல வசதிகளும் இருக்க வேண்டும் என நினைப்பது.அந்த பட்சத்தில் மிகவும் கடினமாக மன அமைதி கெடும்.
5)அடுத்ததாக பணம் பற்றிய பிரச்சனைகளும் எழலாம்.
6)ஏதும் கவலையில்லை,நம் முடிவு மட்டும் தான் முக்கியம் எனும் போது அந்த முடிவில் தீவிர தீர்க்க முடிவோடுயிருக்க வேண்டும்.
7)இப்பொழுது உங்களை பற்றி கூற வேண்டுமானால் உங்கள் கணவர்,மனைவியின் ஒருமித்த கருத்து அவசியம்.
8)சொந்தபந்தங்களை விட்டுவிட்டு பல விஷயங்களை விட்டுக்கொடுத்து தான் வெளிநாடுகளில் வசிக்க முடியும்.
9)முக்கியமாக கவனிக்க வேண்டியது பொருளாதார பிரச்சனை அது என்றுமே நிலையானதல்ல.
10)குடும்பத்திளுள்ள அனைவரின் குழைந்தைகள் உட்பட முழு மனதுடன் முடிவெடுக்க வேண்டும்.அவர்கள் சிறியவர்களாக இருக்கும் பொழுது நன் சொந்த முடிவுகளையும் பிரச்சனைகளையும் தினித்தல் கூடாது.பின்னாளில் பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்ன ரொம்ப பிளேடு பொட்ட மாதிரியிருக்கா? நீங்க பெருமூச்சு விடுவது கேட்கிறது(Just kidding).

நான் மேற்கூறியது போல் "நான் கூறும் அனத்தும் என் ஒருத்தியை மட்டுமே பொருத்த,என் சொந்த கருத்துகள் மட்டும் தான்.அதனால் எதையும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்".
பதில் பதிவு போடுங்கள்.

நன்றி
உமா.

கணவருக்கு இங்கு வேலை என்பதால் உடன் இருக்க வேண்டும் தானே.ஆனால் எனக்கு எப்பவும் இந்தியா தான் பிடிக்கும்.என்னதான் சம்பாதித்தாலும்,வருடம் ஒரு முறை ஊர் சென்று வருவது மிகக்கஷ்டமாத்தான் இருக்கும்.நாம் இங்கு வந்து அடுத்த முறை செல்லும் போது நிறைய விஷேசங்கள் நடந்து முடிந்திருக்கும்.நமக்கு மிகப்பிரியமானவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடும்.நிறைய பிரிவுச்செய்திகள் இருக்கும்.இதை எல்லாம் நினைக்கும் போது சுற்றத்தோடு சேர்ந்து வாழ்வது தான் பிடிக்கிறது.என்ன செய்ய சூழ்நிலை தகுந்தபடி நாட்களை ஓட்ட வேண்டியது தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நானும் என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்கிறேன். என்னைப் பொறுத்த வரை எனக்கு நம் நாட்டில் செட்டில் ஆவதுதான் நல்லது எனப்படுகிறது. இங்குள்ள எல்லா வசதிகளும் பிடித்து இருக்கிறது. ஆனால் அதற்காக இங்கே செட்டில் ஆவது பிடிக்கவில்லை. தங்க கூண்டிற்குள் எவ்வளவு நாள்தான் அடைபடுவது.

இந்தியா போனாலும் இதே அளவு வசதி கிட்டாதுதான். ஆனாலும் அங்கு நம் சொந்தங்கள், நம்ம சுதந்திரம், அங்கு கிடைக்கும் கனிவு அதெற்கெல்லாம் மனம் ஏங்கும். இங்கிருந்து போன புதிதில் கொஞ்சம் சிரமா இருக்கும். மற்றபடி நாம் அங்கு பிறந்து வளர்ந்தவர்கள்தானே. பிள்ளைகளுக்கும் முதலில் கஷ்டமாக இருந்தாலும் பழகி விடுவார்கள். பையன் என்றால் ப்ரச்சனையே இல்லை. தொழில் நிமித்தமாக அவர்கள் எங்கு இருக்க விரும்பார்களோ தெரியவில்லை.

சொந்தங்களால் ப்ரச்சனைதான் என்று நினைத்தாலும் அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. இங்கு ஒரு கஷ்டம் என்றாலும் ஏன் என்று கேட்க ஆள் கிடையாது. நல்ல நட்பு வட்டாரம் இருந்தாலும் அதுவும் ஒரு எல்லைக்குள்தானே. ஊரில் சென்றாலும் குடும்பத்தோடு கிடந்து அல்லல்பட சொல்லவில்லை. பொருளாதார ரீதியாக நல்லபடியாக நாம் செட்டில் ஆகி விட்டாள் நமக்கு ப்ரச்சனை இல்லை. நல்லபடியா ஒரு சேவிங்ஸ் மற்றும் ஒரு பிஸினஸ் இந்த மாதிரி ரெடி பண்ணிவிட்டு இந்தியாவில் போய் செட்டில் ஆவது நல்லது என் எனக்கு தோன்றுகிறது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்