கிரில்ட் மஷ்ரூம்

தேதி: April 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

காளான் - 1 பாக்கெட்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
ஜிஞ்சர்கார்லிக்பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
பட்டர் - 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
குடைமிளகாய் - பாதி
பெங்களூரு தக்காளி - 2


 

தயிர்,மிளகாய்ப்பொடி,ஜிஞ்சர்கார்லிக்பேஸ்ட்,உப்பு பட்டர்,மல்லிஇலை சேர்த்து நன்கு கலக்கவும்.
பாதியாக வெட்டிய காளானை சேர்த்து பிசற வேண்டும்.
சுமார் 1/2 மணிநேரம் ஊற விடவும்
பட்டர் தடவிய கிரில் டிரேயில் மசாலா கலந்த கலந்த காளானை பரப்பி விடவும்.
தக்காளியை இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கும் சதையுடன் கூடிய விதைகளை நீக்கி விட்டு1இன்ச் துண்டுகளாக நறுக்கவும்.குடைமிளகாயையும் 1 இன்ச் துண்டுகளாக நறுக்கி காளான் மேல் பரப்பி கிரில் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

It looks intresting...

என்ன temprature, எவ்வளவு நேரம் க்ரில்ல் பண்ணணும், please உதவி செய்ங்க, im new to cook in oven, Thanks.

நட்புடன்,
திவ்யா

Be happy, make others happy

ஸாதிகா அக்கா, உங்களின் இக் குறிப்பை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது. இப்படி கிரில் செய்து வைத்துக் கொண்டு சாதம், சப்பாத்தி, ப்ரெட் எதனுடன் வேண்டுமாலும் சாப்பிடலாம் போல் இருக்கு. மற்ற ஃப்ரெண்ட்ஸ்சும் இதை செய்து பார்த்தால் பிறகு இக் குறிப்பும் பிரபலமான குறிப்பாக ஆகி விடும். நன்றி உங்களுக்கு.

உங்களின் பின்னூட்டத்தைப்பார்க்கும் பொழுது மிகவும் உற்சாகமாக இருக்கின்றது.மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா மகன் கல்லூரி வேலையெல்லாம் இன்னும் முடியவில்லை என நினைக்கிறேன். உங்களுடைய இந்த குறிப்பை நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்த நண்பர்களுக்கு செய்தேன். அவர்கள் மிகவும் நன்றாக இருந்தது என்று கூறி எனக்கு ஒரே பாராட்டு. இதற்கெல்லாம் காரணமான உங்களிடம் இதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சொல்ல மறந்து விட்டேனே நான் குட மிளகாயையும் காளானோடு மசாலாவில் மிக்ஸ் செய்து செய்தேன்.

அறுசுவைக்கு வந்தே நெடுநாட்கள் ஆகி விட்டது.கிடைத்த சின்ன கேப்பில் பிசி முன் அமர்ந்து இருக்கின்றேன்.ஊருக்கு செல்லும் பிஸியில் இருக்கின்றேன்.ஒவ்வொருமுறையும் செய்து விட்டு பாராட்டி இருக்கின்றீர்கள்.நன்றி.சந்தோஷம்.உங்கள் முறையில் நானும் அடுத்த முறை கேபிஸிகம் சேர்த்து செய்கிறேன்.மகனுக்கு நல்லபடியாக அட்மிஷன் முடிந்து விட்டது.சுரங்கத்துறை பொறியியல் படிக்கும் ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு இப்பொழுது எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவில் எஞ்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து இருக்கின்றார்.இனி ஹாயாக ஊருக்கு சென்று விடலாம்.
ஆகஸ்ட்டில்தான் காலேஜ் திறக்கின்றார்கள்.
ஸாதிகா
ஸாதிகா

arusuvai is a wonderful website