சிக்கன் சில்லி ப்ரை

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 3
டால்டா - முக்கால் கப் அல்லது நெய்
வற்றல் - 6 அல்லது 7
பூண்டு - ஒன்று
வினிகர் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி


 

கோழியை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வற்றல், பூண்டை வினிகர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கறியுடன் உப்பு, மஞ்சள் தூள் அரைத்த விழுது கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், பின் கறியை இட்லித் தட்டில் ஆவியில் நன்றாக வேக வைக்கவும். வெங்காயத்தை பொடியாக வெட்டி நெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும். பின் கறியை நெய்யில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம், வெட்டிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்