வெஜ் சப்ஜி

தேதி: April 12, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 100 கிராம்
உருளை -100 கிராம்
பீன்ஸ் - 10
காலிஃப்ளவர் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மல்லி இலை, புதினா - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

முதலில் எல்லாக்காயும் மீடியம் சைஸில் கட் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி புதினா கட் செய்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு லேசாக சிவந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு வதக்கி, தக்காளி சேர்த்து மல்லி, புதினா, மிளகாய், உப்பு போட்டு சிறிது வதக்கவும்.
அனைத்து மசாலா தூள்களை சேர்க்கவும். காய்களை சேர்த்து வதக்கி அரை கப் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும். ஒன்று அல்லது இரண்டு விசில் வந்து இறக்கவும்.
சூப்பர் மணமும் சுவையும் உள்ள வெஜ் சப்ஜி ரெடி.


இது தந்தூரி ரொட்டி, சப்பாத்தி உடன் பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்