ப்ளேட் வால் ஹேங்கிங்

தேதி: April 13, 2009

5
Average: 4.8 (4 votes)

 

ப்ளேட்
பெரிய கோல்டன் மணி
சிறிய கோல்டன் மணி
பூக்கள்
நூல், ஊசி

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பூக்களை இரண்டு மூன்று பூக்களாக எடுத்து ஒன்றாக சேர்த்து வைத்து அதன் இதழ்களை உள்பக்கமாக மடக்கி விடவும். பிறகு பூக்களை தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் ஊசியில் நூலை கோர்த்து அடியில் முடிச்சு போட்டுக் கொள்ளவும். அதில் ஒரு சிறிய மணியை கோர்க்கவும். பின்னர் நான்கு பெரிய கோல்டன் மணியை கோர்க்கவும். அடுத்து ஒரு பூவை கோர்க்கவும்.
நான்கு கோல்டன் மணிக்கு இடையில் ஒரு பூ என்ற வகையில் 8 பூக்கள் கோர்க்க வேண்டும். இதைப் போல் முதலில் எட்டு சரங்களை கோர்த்துக் கொள்ளவும்.
அதன் பிறகு இரண்டு சரம் மணியை எடுத்து தட்டின் உள்பக்கம் கடைசி சுற்றில் இருக்கும் ஒரு ஓட்டையில் ஒரு சரம் மணியை விடவும். அடுத்து இரண்டு ஓட்டைகள் இடைவெளி விட்டு மற்றொரு சரத்தையும் கோர்த்து அதை பின்புறமாக திருப்பி இரண்டையும் இணைத்து மேலே முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
இதேப் போல் இரண்டு துளைகள் விட்டு ஒரு சரமும் இன்னும் இரண்டு துளைகள் விட்டு ஒரு சரத்தையும் விட்டு மேலே முடிச்சு போடவும். இதைப் போல் வெளி வரிசை முழுவதும் சரத்தை தொங்க விடவும்.
மூன்று மணிக்கு இடையில் ஒரு பூ என்ற வகையில் 6 பூக்கள் கோர்த்து எட்டு சரங்கள் செய்து கொள்ளவும். பின்னர் நடுவில் இருக்கும் வரிசையிலும் இதுப் போல் சரங்களை கோர்த்து விடவும்.
மேலே மணி கோர்க்க மூன்றாவது வரிசையில் உள்ள துளையின் அடிவழியாக நூலின் ஒரு முனையை விட்டு மேலிருந்து எடுக்கவும். அந்த மற்றொரு முனையை ஒரு துளை விட்டு அடுத்த துளையின் வழியாக எடுத்து இரண்டு முனையையும் சேர்த்து பிடித்துக் கொள்ளவும். அதில் ஒரு முனையில் ஊசியை கோர்த்து அதன் வழியாக மூன்று பெரிய மணியை கோர்க்கவும். அதன் பிறகு ஒரு பூவை கோர்த்து அதைத்தொடர்ந்து 3 மணியை கோர்க்கவும். இதுப் போல் மூன்று பூக்கள் கோர்த்த பின்னர் மூன்று மணியை கோர்த்துக் கொள்ளவும் இதைப் போல் மற்றொரு நூலிலும் கோர்க்கவும்.
ஒரு துளை இடைவெளி விட்டு அந்த சுற்று முழுவதையும் கோர்த்துக் கொள்ளவும்.
பிறகு எல்லா நூல்களையும் சேர்த்து நன்கு இறுக்கமாக முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
மேலே தொங்கவிடுவதற்கு தகுந்தாற் போல் முடிச்சுப் போட்டிருக்கும் மொத்த நூல்களையும் இரண்டாகப் பிரித்து அதில் மூன்று பெரிய மணியை கோர்க்கவும். மற்றொரு நூலிலும் இதுப் போல் கோர்த்து இரண்டு நூலையும் இணைத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
அழகான தங்கநிறத்தில் ஜொலிக்கும் ப்ளேட் வால் ஹேங்கிங் தயார்.
இந்த அழகிய வால் ஹேங்கிங்கை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சாந்தி முத்துராமலிங்கம் அவர்கள். சிறு வயதிலிருந்தே சமையலில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், பழங்கால சமையல், இக்கால நவீன சமையல் என்று அனைத்திலும் திறன் படைத்தவர். சமையல் மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த சில கைவினைப் பொருட்களின் செய்முறையையும் நம்முடன் பகிர்ந்துக் கொள்ள வந்துள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சாந்தி, நீங்கள் மேலே செய்து காட்டியுள்ள மோபைல் மிக அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அழகாக இருக்கு.குட்டிக்குழந்தைக்களுக்கு தொட்டிலில் கூட கட்டி தொங்க விட்டால் பார்த்து சிரித்து கையை காலை ஆட்டிக்கொண்டு சத்தம் காட்டாமல் படுக்கும்.என் குழந்தைங்க சின்னதாக இருந்த போது இது மாதிரி வாங்கி போட்டேன்.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப அழகா இருக்கு. செய்வதற்கும் எளிமையாக இருக்கு. நன்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ரொம்ப அழகா இருக்கு. செய்வதற்கும் எளிமையாக இருக்கு. நன்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta