ஒயிட் சாஸ்

தேதி: April 14, 2009

பரிமாறும் அளவு: 1 போத்தல்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டர் (உருக்கியது) - 100 கிராம்
கோதுமைமா (மைதாமா) - ஒரு கப்
பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்


 

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் உருக்கிய பட்டரை போட்டு ஓரளவு சூடாக்கவும்.
பட்டர் ஓரளவு சூடானதும் அதன் மேல் கோதுமை மாவை(மைதாமாவை)தூவினாற் போல போட்டு வறுக்கவும். வறுத்த பின்பு அதனுடன் பாலை ஊற்றி நன்றாக கலக்கவும்.
பின்பு அதனுடன் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு விடாமல் நன்றாக கிளறி கலந்து கொண்டிருக்கவும்.
இவையாவும் ஓரளவு தடிப்பாக வந்ததும் அதில் தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும். பின்பு ஒயிட் சாஸ் தயாராகி விடும்.
ஒயிட்சாஸ் தயாராகிய பின்பு ஒயிட் சாஸ் உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய பின்பு இதனை ஓரளவு ஆறவிடவும். ஓரளவு ஆறிய பின்பு தொற்று நீக்கிய போத்தல்களில் விடவும். பின்பு அதனை நன்றாக ஆறவிடவும்.
நன்றாக ஆறிய பின்பு சாஸ் உள்ள போத்தலை காற்று உட்புகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.


இத்தாலிய மக்கள் தங்களுடைய உணவின் சுவையை அதிகரிப்பதற்காக ஒயிட் சாஸை அதிகளவில் உப யோகிப்பார்கள் கொழுப்பு மினரல் கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஆகிய சத்துகள் அடங்கியது. இதன் சுவையை அறிய இதனை செய்து சாப்பிட்டு அறியவும். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விசயங்கள் - பட்டர் ஓரளவு சூடானதும் அதன் மேல் கோதுமை மாவை (மைதாமாவை) தூவினாற் போல போட்டு வறுக்கவும்.

மேலும் சில குறிப்புகள்