பேக்ரோஸ்ட் பிரிஞ்ஜால்

தேதி: April 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய்(வயலட் மீடியம்) - 4
பட்டர் - 2 தேக்கரண்டி
சீஸ்துருவல் - கால் கப்
ஒயிட் சாஸ் - ஒரு தேக்கரண்டி
தக்காளிப்பழ சாஸ் - ஒரு தேக்கரண்டி
சில்லிசாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு


 

ஒரு பலகையில் கத்தரிக்காயை வைத்து அதன் தேவையற்ற பகுதிகளை அகற்றிய பின்பு கத்தரிக்காயை வட்ட வட்டமாக வெட்டவும்.
வெட்டிய கத்தரிக்காயில் சிறிதளவு உப்பை தடவி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும்.
கத்தரிக்காய் உப்பில் ஊறிய பின்பு அடுப்பில் நாண்ஸ்டிக் தாட்சியை(வாணலியை) வைத்து அதில் பட்டரை போட்டு உருக்கவும்.
பட்டர் உருகியதும் அதில் உப்பில் ஊற்றிய கத்தரிக்காய்களை பரப்பி வைக்கவும்.
பின்பு அதன்மேல் மிளகுத்தூள் தூவி சிவக்க ரோஸ்ட் செய்யவும். இதனைப் போல மற்றைய பக்கமும் சிவக்க ரோஸ்ட் செய்யவும்.
அதன் பின்பு அடுப்பிலிருந்து நாண்ஸ்டிக் தாட்சியில்(வாணலியில்) இருந்து ரோஸ்ட் செய்த கத்தரிக்காய் களை எடுக்கவும்.
இதனை ஒருபாத்திரத்தில் வடிவாக எடுத்து வைக்கவும். இதனைப்போல எல்லாக் கத்தரிக்காய்களையும் செய்யவும்.
பின்பு ரோஸ்ட் செய்த கத்தரிக்காய்களை எடுத்து பேக்பண்ணும் பாத்திரத்தில் அடுக்கி ஒழுங்குபடுத்தவும். அதன் பின்பு அதன் மேல் சீஸ் துருவலை தூவவும்.
அதனை தூவிய பின்பு அதன் மேல் ஒயிட் சாஸை ஊற்றவும்(இதனை தயாரிக்கும் விதம் எனது குறிப்பில் www.arusuvai.com /tamil/node/12431இல் உள்ளது).
பின்பு அதன் மேல் தக்காளி சாஸ், சில்லி சாஸை ஊற்றவும். பின்பு இவை யாவும் போடப்பட்ட பாத்திரத்தை பேக் செய்யும் அவனில் 180 °c யில் 30 நிமிடங்கள் வைத்து பேக் பண்ணவும்.
பேக் பண்ணிய பின்பு சுவையான சத்துகள் நிறைந்த பேக்ரோஸ்ட் பிரிஞ்ஜால் தயராகிவிடும் .
ஒருதட்டில் பிஸ்ஸா, சோறு(சாதம்), இடியப்பம், பிட்டு பாண், தோசை, இட்லி ஆகியவற்றில் ஒன்றுடன் இதனை வைத்து பரிமாறவும்.


கத்தரிக்காய்(பிரிஞ்ஜால்) கூடுதலாக கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். கத்தரிக்காயை(பிரிஞ் ஜால்)சாறு பிழிந்து எடுத்து காலின் வீக்கத்தை குறைப்பதற்கு பூசிக் கொள்வார்கள் அத்துடன் வியர்வையை தடைசெய்ய கத்தரிக்காயை(பிரிஞ்ஜால்)சாறு பிழிந்து எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவார்கள் கத்தரிக்காய்(பிரிஞ்ஜால்)போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்று கூட சொல்வார்கள். கத்தரிக்காயில்(பிரிஞ்ஜால்)நீர், புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட், நார்த்தன்மை, பாஸ்பரஸ் கொழுப்பு, கால்சியம், வைட்டமின் B1, B2, C, அயன் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட கத்தரிக்காயில்(பிரிஞ்ஜால்)செய்யப்பட்ட பேக்ரோஸ்ட் பிரிஞ்ஜால் மேற்குறிப்பிட்ட சகலசத்துகளுடன் உப்பு, மிளகுத்தூள், பட்டர், சீஸ், ஒயிட்சாஸ், தக்காளிசாஸ், சில்லிசாஸ் அகியவற்றின் சுவையும் சேர்ந்து மிகமிக சுவையாக காணப்படும். அத்துடன் செய்வதிற்கு இலகுவானதும் ஆகும் இந்த பேக்ரோஸ்ட் பிரிஞ்ஜாலை இத்தாலிய மக்கள் விரும்பி உண்பார்கள். இதன் சுவையை இதனை செய்து பார்த்து அறியவும். எச்சரிக்கை - இருதய நோயாளர், கத்தரிக்காய் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - நாண்ஸ்டிக் தாட்சி(வாணலி)க்கு பதிலாக மற்றையதாட்சியை(வாணலியை)பயன்படுத்த விரும்பினால் பட்டர் கூடுதலாக தேவைப்படும். கவனிக்க வேண்டிய விசயங்கள் - அதன் ரோஸ் பண்ணப்படும் அளவையும் கவனிக்கவும்.

மேலும் சில குறிப்புகள்