மாம்பழ பனீர் லட்டு

தேதி: April 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாம்பழம் (நன்கு பழுத்த இனிப்பான) - 2
பனீர்(துருவிய)- கால் கிலோ
ஏலாக்காய்த்தூள்- கால் தேக்கரண்டி
சீனி(சர்க்கரை)தூள் - தேவையான அளவு
செர்ரிப்பழம் - 12


 

ஒரு பாத்திரத்தில் சீனி(சர்க்கரை)தூள், துருவிய பனீர் ஆகியவற்றை விரல்களால் நன்கு பிசைந்து வைக்கவும்.
பின்பு பிசைந்து வைத்த கலவையுடன் ஏலாக்காய்த்தூளையும் போட்டு பிசையவும்.
பிசைந்த பின்பு இக்கலவை உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
இதனை பன்னிரெண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
மாம்பழத்தின் தோலை சீவி அதன் தேவையற்ற பகுதிகளை அகற்றவும். பின்பு அதன் சதைப்பகுதியை பன்னிரெண்டு உருண்டை வடிவத்துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
பின்பு அந்த துண்டுகளை உருட்டி வைத்திருக்கும் பனீர், சீனி(சர்க்கரை)உருண்டைக்குள்வைத்து மூடி லட்டு வடிவில் உள்ள உருண்டைகளாக உருட்டவும்.
இப்படியே எல்லா உருண்டைகளையும் உருட்டவும். உருட்டிய பின்பு ஒவ்வொரு உருண்டையின் மேல் ஒவ்வொரு செர்ரிபழங்களை மெதுவாக அமர்த்தி வைக்கவும்.
அதன் பின்பு இவையாவற்றையும் ஒரு தட்டில் வைக்கவும். வைத்த பின்பு இத்தட்டினை குளிர்சாதனப் பெட்டியில் (2 - 3) மணித்தியாலம் வைத்து குளிரூட்டவும்.
குளிரூட்டிய பின்பு சுவையான மாம்பழ பனீர் லட்டு தயாராகிவிடும். அதன் பின்பு இதை எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.


மாம்பழ பனீர் லட்டு சுவையானதும் சத்துகள் நிறைந்ததும் எல்லோராலும் விரும்பி உண்ணக்கூடியதுமாகும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

மேலும் சில குறிப்புகள்