ஈசி மாங்காய் சாதம்

தேதி: April 14, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் -- 1 என்னம்
சாதம் -- 1 கப்
கடுகு,உளுந்து -- தாளிக்க
கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
கேரட் துருவல் -- 1 டீஸ்பூன் (தேவை எனில்)
உப்பு -- ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)


 

மாங்காயை துருவிக்கொள்ளவும்.
சாதத்தை ஆற வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து கடலை பருப்பு போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கேரட் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
பின் மாங்காய் துருவல் சேர்த்து வதக்கி சாதம் சேர்த்து உப்பு தேவை எனில் தூவி வதக்கி பறிமாறலாம்.


மாங்காய் புளிப்பாய் இருந்தால் அளவு கம்மியாக தேவைப்படும்.
அதிகமாக மாங்காய் துருவல் சேர்த்தால் தான் ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மாங்காய் சாதம் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது..காரமா புளிப்பா ரைஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..

மேலும் எப்போதாவது பிறந்த நாள் வாழ்த்து பகுதிய பார்ப்பேன்,,இன்னைக்கு உங்களுக்கு பிறந்த நாள் என்றும் இருந்தது..என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்..இதுக்கு முன்னால உங்களோட பேசியதில்ல..பின்னூட்டம் கொடுக்கதான் வந்தேன்..தற்செயலாக வாழ்த்துபகுதிய பார்த்ததும் சொல்லாமல் இருக்க மனசில்ல..

ஹாய் தாமரை,
ரொம்ப ரொம்ப சந்தோசம்.. இந்தியாவில் உள்ள எனக்கு பிறந்த நாள் அன்று "USA" ல் இருந்து வாழ்த்து வர அறுசுவைதானே காரணம்.
நன்றி அறுசுவை மற்றும் பாபு அண்ணா அவர்களுக்கு...

மேலும் மேலும் சமையல் செய்து பின்னூட்டம் அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி (சொல்ல வார்த்தைகள் இல்லை!! தாமரை.. :-0

ஈஸி மாங்காய் சாதம் சூப்பர் டேஸ்ட்.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. லக்ஷ்மிஷங்கர் அவர்கள் தயாரித்த ஈஸி மாங்காய் சாதத்தின் படம்

<img src="files/pictures/aa321.jpg" alt="picture" />

அட்மின் அண்ணா, அதுக்கள்ள படம் வந்துவிட்டது ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்