புதினா சாதம்

தேதி: April 14, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

பாஸ்மதி அரிசி -- 1 கப் (நெய்யில் வதக்கி 10 நிமிடம் ஊறவைக்கவும்)
புதினா -- 3/4 கட்டு (ஆய்ந்து கழுவி வைக்கவும்)
தேங்காய் -- 1 பத்தை
பச்சை மிளகாய் -- 3 என்னம் (காரத்திற்கு ஏற்ப)
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 4 என்னம்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
நெய் -- 2 ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப


 

வாணலியில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்.
பின் சீரகம்,சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
புதினா,தேங்காய்,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவும்.
பின் தாளித்த கலவையில் அரைத்தவைகளை கொட்டி ஒரு வதக்கு வதக்கி அரிசியை போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கலக்கி வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

இது மிகவும் நன்றாக இருந்தது....

இது மிகவும் நன்றாக இருந்தது....

இது மிகவும் நன்றாக இருந்தது....