கோவைக்காய் வறுவல்

தேதி: April 15, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோவைக்காய் -- 1/4 கிலோ
எண்ணைய் -- 1/4 கப்
மஞ்சள் தூள் -- 1 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
சாம்பார் தூள் -- 1 1/2 டீஸ்பூன்
தாளிக்க :
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

கோவைக்காயை வட்டமாக நறுக்கவும்.
பின் வாணலியில் பாதி எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து போட்டு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
பின் கோவைக்காயை போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
மிதியுள்ள எண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வதக்கவும்.
நன்றாக வதக்கவும்.
பின் இறக்கும் சமயம் சாம்பார் தூள் சேர்த்து எண்ணையை ஊற்றி வதக்கி இறக்கவும்.
வறுவல் ரெடி.


கோவைக்காய் வதங்க 45 நிமிடத்திற்கு மேல் பிடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்