ஷீக் கபாப்

image

வழங்கியவர் : asiya omar

தேதி : வியாழன், 16/04/2009 - 09:15

ஆயத்த நேரம் : ஒரு மணி நேரம்

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

0
No votes yet
Your rating: None
 

 

  • கொத்திய ஆட்டு இறைச்சி - அரைகிலோ
  • நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
  • நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
  • வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் கட் செய்தது
  • முந்திரிப்பருப்பு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
  • கடலைமாவு அல்லது கார்ன் மாவு - 2 டீஸ்பூன்
  • சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா - அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2 (கட் செய்தது)
  • மல்லி,புதினா,மேதி இலை - தலா 1 டேபிள்ஸ்பூன்
  • பப்ரிகா பவுடர் - கால் - அரைஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • முட்டை வெள்ளைக்கரு - 1

 

  • கறியை சுத்தம் செய்த்து நீர் வடிகட்டி முட்டை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் சுற்றிக்கொள்ளவும்.
  • தயார் செய்ததை ஃப்ரிஜ்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்.
  • பின்பு அரைமணி கழித்து முட்டை வெள்ளைகருவை கறிக்கலவையுடன் சேர்த்து திரும்ப அரை மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுக்கவும்.
  • பின்பு கறிக்கலவையை 12 அளவாக பிரித்து கொள்ளவும்.
  • ஒவ்வொரு அளவை எடுத்து தண்ணீர் தொட்டுகொண்டு கபாப் கம்பியில் (skewer)நீள் உருளையாக பிடித்து வைக்கவும்.
  • இப்படி தயார் செய்தவைகளை சார்கோல் அடுப்பில் வைத்து அல்லது கிரில் செய்து எடுக்கவும்.
  • சுவையான ஷீக் கபாப் ரெடி. இதனை சூடாக க்ரீன் சட்னியுடன் (மிண்ட் சட்னி)பரிமாறவும்.

Note:

பப்ரிகா பவுடர் சேர்ப்பதினால் இறைச்சி விரைவாக வெந்து விடவும், மெதுவாகவும் செய்ய உதவுகிறது.