தாளித்த சொதி

தேதி: April 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - 200 கிராம்
வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4
பூண்டு - ஒன்று (30 கிராம்)
(முதல்)பால் - 400 மி.லி
புளி - 25 கிராம்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
சுடுத்தண்ணீர் - 400 மி.லி


 

சொதி செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றலை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி விட்டு தட்டி வைக்கவும். புளியை 100 மி.லி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தட்டி வைத்திருக்கும் பூண்டை போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து வதக்கி விடவும்.
அதில் உடனேயே கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றவும். வெந்தயம் வதங்கினால் கசப்பு தன்மையாக இருக்கும்.
கலவையை கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
இறுதியாக பாலை சேர்த்து கிளறி விட்டு ஒரு முறை கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
சுவையான தாளித்த சொதி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.
இந்த தாளித்த சொதியை இடியாப்பத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிப்பி ரொம்ப நல்லா இருக்கே. ஓகே இடியாப்பதுடன் செய்து பார்க்கிறேன்.ஆனா பார்க்கும்போதே ரொம்ப காரமா தெரியுதே, அந்த செத்தல் மிளகாய் கலரே அப்படிதான் இல்ல.

indira

அதிரா நீங்க எல்லா சமையலிலும் ஏன் பால் சேர்க்கிறீகள்.
இடியப்பம், ராகியில் செய்த்தா? சிகப்பரிசி மா வா?
ஜலீலா

Jaleelakamal

வணக்கம் அதிரா மேடம்
உங்களுடைய இடியப்பம் சோதி பார்க்க அழகாயிருக்கு.நானும் இந்த சோதி செய்வது உண்டு ஆனல் உள்ளி போடுவதில்லை இந்த முறையில் செய்து பார்க்கிறான் இன்று நன்றி உங்கள் குறிப்புக்கு அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சொதி... சொதி...
இந்திரா, விரும்பினால் மிளகாய் விதைகளை வெளியே கொட்டிவிட்டுச் சேருங்கள். புளியால்தான் அப்படிக்கலராக இருக்கு, மற்றும்படி காரமிருக்காது. மிளகாய், வெங்காயம் நன்கு பொரிய வேண்டும், அப்போதுதான் சொதி சுவையாக இருக்கும்.

ஜலீலாக்கா, நான் எல்லாக் கறிகளுக்கும் பால் சேர்ப்பதில்லை. வெள்ளைக்கறிகளுக்கு மட்டுமே சேர்ப்பேன். இது சொதி என்பதால் நிறைய சேர்ப்பேன். இடியப்பம், வெள்ளை மாவோடு சிகப்பரிசி மாக் கலந்து செய்தது.

சுகா, உள்ளி வெந்தயம் நிறையப் போட்டுத்தான் நான் சொதி செய்வேன். உடம்பிற்கு நல்லதென்பதால்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

காய்ந்த மிளகாய் பிடிக்காததால் பச்சை மிளகாய் போட்டு செய்தேன், இடியாப்பத்திற்கு (கடையில் வாங்கியது) ரொம்பவும் நன்றாக இருந்தது. நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் அதிரா,
பின்னூட்டம் பின்னுக்குப் போய் விட்டது. :) மன்னிக்கவும். சொதி சுவையாக இருந்தது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சொதி...
ஹைஷ் அண்ணன், எனது குறிப்பில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒரு குறிப்பாவது செய்து, பின்னூட்டமும் தந்தமைக்கு மிக்க நன்றி. எமக்காக சமைத்துச் சொல்வதற்கு, உண்மையில் உங்களைப் பாராட்ட வேண்டும் மிக்க நன்றி.
//காய்ந்த மிளகாய் பிடிக்காததால் /// காய்ந்த மிளகாயைப் பிடிக்க முடியாதல்லவா, மீனைத்தான் பிடிக்க வேண்டும், இது கடையில் தான் வாங்க வேண்டும்...

இமா மிக்க நன்றி..//சொதி சுவையாக இருந்தது/// இம்முறை ஒருவரிப் பதிலாக முடித்துவிட்டீங்கள். ஹைஷ் அண்ணனே நிறைய எழுதிப்போட்டார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்