வெள்ளை கற்களில் தோடு மற்றும் நெத்தி சுட்டி செய்வது எப்படி?

தேதி: April 16, 2009

5
Average: 4.5 (2 votes)

இந்த அழகிய தோடு மற்றும் நெத்தி சுட்டி செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 

ஒயிட் ஸ்டோன்
குங்குரு
மணி (கோல்டன் நிறம்)
வளையம்
பொடிமணி
கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
ப்ரேஸ்லெட் கொக்கி
சிறிய டாலர்

 

நெத்தி சுட்டி மற்றும் தோடு செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
தோடு செய்ய: ஒரு வளையத்தில் பொடி மணிகள் ஐந்து அல்லது ஆறு கோர்க்கவும்
ஒரு பெரிய வெள்ளை ஸ்டோனின் அடியில் அந்த பொடி மணி கோர்த்த வளையத்தை கோர்த்து வளையத்தை நெருக்கி விடவும். அதைப் போல் மேலே இருக்கும் துளையில் ஒரு வளையத்தை மாட்டவும்.
வெள்ளை ஸ்டோனின் மேல் புறம் மாட்டி இருக்கும் வளையத்தில் காதில் மாட்டுவதற்கான கொக்கியை மாட்டிவிட்டு வளையத்தை நெருக்கி விடவும். இதைப்போல் இரண்டு தோடுகள் செய்துக் கொள்ளவும்.
நெத்தி சுட்டி செய்ய: நெத்திசுட்டியின் அடியில் வைக்கும் சிறிய டாலர் போன்ற பூவின் மேல் பகுதியில் ஒரு வளையத்தை கோர்த்து அதில் ஒரு ஒயிட் ஸ்டோன் மணியின் அடிப்பகுதியை கோர்த்து வளையத்தை நெருக்கி விடவும்.
அந்த ஒயிட் ஸ்டோனின் மேல் பகுதியில் ஒரு வளையத்தை கோர்த்து அதன் மேல் ஒரு ஸ்டோனை கோர்த்து (அடிப்பகுதி) வளையத்தை நெருக்கி விடவும். இதேப் போல் ஐந்து ஸ்டோன் கோர்க்கவும்
அதன் பிறகு பொடி மணிகள் கோர்த்த வளையத்தை நெத்திசுட்டி டாலரின் ஒவ்வொரு பூவிதழ் உள்ள ஒட்டையில் மாட்டிவிட்டு வளையத்தை நெருக்கி விடவும்.
இப்பொழுது நெத்தி சுட்டியின் மேல் பகுதியில் ஐந்து வளையம் கோர்த்த கொக்கியை கோர்த்து நெருக்கி விடவும்.
அழகிய நெத்தி சுட்டி மற்றும் தோடு தயார். இதைப் போல் வெவ்வேறு வண்ணங்களிலும் டிசைன்களிலும் நம் விருப்பத்திற்கு ஏற்ப செய்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் பிரமாதம் அசத்திடீங்க கவி ப்ரியா ஈசியா இருக்கு பார்க்கும்போதே அழகாகவும் இருக்கு

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு, ஆமென்

அழகாக இருக்கிறது கவிப்ரியா.
இமா

‍- இமா க்றிஸ்

கவிபிரியா ரொம்ப அருமை. நெற்றி சுட்டி சூப்ப‌ர். நெற்றி சுட்டி கூட‌ நாமே செய்ய‌லாமா?

நெற்றி சுட்டிக்கு ஒரு டிப்ஸ், நெற்றி சுட்டி வகிடில் மாட்டியதும் , அங்கும் இங்கும் ஓடும், அதற்கு சின்ன குட்டி சேஃப்டி பின் கோல்ட் கலரில் உள்ளதை நெற்றி சுட்டியின் டாலருக்கும் வளையத்தில் முடியோடு சேர்த்து குத்தி விட்டால் அங்கு இங்கு நகறாது.

Jaleelakamal

It is very beautiful. It is very easy to make and it is very attractive. It can be used by Children as well as women. Nice preparation. I like it very much. Thank you.

vellai kallu jwell making seyya romba yeesiya
sollikkuduthatharkku romba nandri . materials engu kidaikkumnu solla mudiyuma.

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

பெண்களுக்கு உகந்த கைவேலை மிக்க நன்றீ

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta