மாங்காய் சம்பல்

தேதி: April 17, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 8-10
தேங்காய்ப்பூ - 1 கப்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
பச்சை மிளகாயை 5 நிமிடம் ஸ்ரீம் செய்து எடுக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
கிரைண்டரில் மாங்காய், வெங்காயம், மிளகாய், தேங்காய்ப்பூ, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
இச்சம்பல் இடியப்பம், புட்டு, தோசை, இட்லியுடன் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வத்சலா... மாங்காய் வாங்கி நீண்ட நாளாக பிறிச்சில் இருந்தது. சொதி வைக்கலாம் என இருந்தேன் உங்கள் மாங்காய்ச்சம்பல் கண்ணில் பட்டது.... நீண்டகாலத்துக்கு முன் சாப்பிட்டது இப்போ மீண்டும் சாப்பிட்டோம்... அருமை... அருமை. மாங்காய் வாங்குவதானால் தூரத்தான் போகவேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த மாங்காய் சம்பலின் படம்

<img src="files/pictures/aa289.jpg" alt="picture" />

அதிரா, உங்கள் பின்னூட்டத்திற்கும், படம் எடுத்து அனுப்பியமைக்கும் மிக்க நன்றி. படம் இணைத்த அட்மினுக்கும் மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"