ரசமலாய்

தேதி: April 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரிக்கோட்டா சீஸ் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - தேவையான அளவு
குங்குமப்பூ - தேவையான அளவு
நட் வகைகள் - தேவையான அளவு (நற நறவென்று பொடி செய்தது)


 

ரிக்கோட்டா சீஸ், சர்க்கரை மிக்ஸ்யில் (அ) பிலென்டரில் அடிக்கவும் (சர்க்கரை கரையும் வரை. கலவை ரொம்ப தண்ணியாகும் வரை அடிக்கக்கூடாது).

இந்தக் கலவையை ஓவனில் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி பரப்பவும்.

300 degree F ப்ரீஹீட் பண்ணிய ஓவனில் வைக்கவும். பின்னர் பேக் பண்ணிய சீஸை ஒரு கத்தியால் குத்தி பதம் பார்க்கவும். கத்தியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் (பதம் சரியாக சுமாராக வர நிமிடம் எடுக்கும்)

சில சமயம் பேக் ஆன சீஸ் தண்ணீர் விடும். அப்படி ஆகுமெனில் அந்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.

சீஸ் ஆறியவுடன் விருப்பமான வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

பாலை சர்க்கரை, பொடி பண்ணிய ஏலக்காய் சேர்த்து காய்ச்சி இறக்கவும்.

பின்னர் வெட்டிய சீஸ் துண்டுகள் மேல் ஆறிய பாலை ஊற்றவும்.

ரசமலாய் துண்டுகள் மேல் குங்குமப்பூ மற்றும் நட் வகைகள் தூவி அலங்கரிக்கவும்.

சுவையான ரசமலாய் தயார். பின்னர் fridge-ல் வைத்து கூல் ஆனவுடன் சாப்பிடவும்.


பால் காய்ச்சும் போது உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். அதே போல் சீஸுடன் 3/4 கப் சேர்க்கனும் என்றில்லை. உங்கள் சுவைக்கு ஏற்றார் போல் சேர்க்கவும். பேக் பண்ணும் போது பேக் பேன் மீது அலுமிநியம் பாயில் பேப்பர் போட்டு மூடி பின்னர் அதில் ஒரு சிறு ஓட்டை போட்டு பேக் பண்ணினால், சீஸ் பிரவுன் ஆகுவதில் இருந்து தடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hi
im also prepared the same method,but i kept 400 d f for 40 mins,but then also it didnt cook properly,while eating it sticked in the teeth.i dont know why.
i use Half & Half milk

May be it depends on the oven you are using. Usually it will get baked. If not try to keep it for some more time. Insert a knife or toothpick to see whether it got baked.

HI Sorry for typing in Tamil. I do not have the appropriate software.

In your recipe you have not mentioned how long to bake. You have just mentioned 300 degs . Please can you provide the baking time information.

Thanks

it will take arnd 35-45 mins

நன்றாக் இருந்தது உங்க ரஸமலாய்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்