ரோஸ்மில்க்

தேதி: April 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மில்க்ஸ்வீட் - 200 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10
சைனா கிராஸ் - சிறிது
சர்க்கரை - 2 டம்ளர்
ரோஸ் எசன்ஸ் - 6-8 துளிகள்


 

சைனாகிராஸை 1/2 டம்ளர் நீர் விட்டு அடுப்பில் காய்ச்சவும்.
கரைந்ததும் அகலமான தட்டில் ஊற்றி ஆற விட்டு கெட்டியானதும் கத்தியால் குட்டி குட்டி சதுரங்களாக (குறுக்கிலும், நெடுக்கிலும்) கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
பாலை கொதிக்கவிட்டு சர்க்கரை சேர்த்து 3/4 லிட்டர் வரும் வரை குறுக்கவும்.
மில்க் ஸ்வீட்டில் முந்திரியை சேர்த்து அரைத்து பாலில் கலந்து ரோஸ் எசன்ஸ் கலந்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
குளிரூட்டப்பட்டதும் கண்ணாடி டம்ளர்களில் விட்டு சைனாகிராஸ் துண்டங்களை மிதக்கவிட்டு ஜில் என்று பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அருமை.சிம்பிளாக தான் ரோஸ் மில்க் செய்து பழக்கம்.இது ரிச்சாக இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பின்னூட்டத்திற்கு நன்றி.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரிச்சான ரோஸ் மில்க்தான் இது.இந்த வெயிலுக்கு இதமாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அருமை.ஆனால் இதுதானா ரோஸ் மில்க்?

நன்றி பாலா பின்னூட்டத்திற்கு.இதுவும் ரோஸ் மில்க்.பல முறைகளில் செய்யலாம்.வீட்டில் மில்க் ஸ்வீட் மிஞ்சும்பொழுது இம்முறையில் செய்யலாம்.வெறும் பாலுடன்,சர்க்கரை,ரோஸ்மில்க் எசண்ஸ் சேர்த்துக்கலக்கினால் அதுவும் ரோஸ் மில்க்தான்.

arusuvai is a wonderful website

ஷாதிகா மேடம் எனக்கு ஒரு சந்தேகம். நோன்பு காலத்தில் ரோஸ்மில்க் செய்யும் போது அதில் ஜவ்வரிசி போன்று விதைகள் மிதக்குமே அதன் பெயர் என்ன எங்கு கிடைக்கும்னு சொல்வீங்களா ப்ளீஸ். பல வருடங்களுக்கு முன் இஸ்லாமிய நண்பரின் வீட்டில் சுவைத்தோம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா,நலமா?ஜவ்வரிசிபோல் ரோஸ்மில்க் மற்றும் சர்பத்களில் மிதப்பது சப்ஜா விதை.தமிழ்நாட்டிலுள்ள அநேக மளிகை கடைகளில் கிடைக்கும்.நாட்டு மருந்துகடைகளிலும் கிடைக்கும்.கடுகு போல்சிறிய சைசில் இருக்கும்.நீரில் இரவு முழுக்க ஊற வைத்தால் கிரே கலர் ஜவ்வரிசி போல் ஆகி விடும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதால் நோன்பு காலங்களில் அதிகம் சேர்த்துக்கொள்வோம்.

arusuvai is a wonderful website