வெங்காய வடகம்

image

வழங்கியவர் : shadiqah

தேதி : Sat, 18/04/2009 - 15:50

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • சாதம் - 2 கப்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  • கொரகொரப்பாக அரைக்க வேண்டியவை:
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • மிளகு - 1 தேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் - 10
  • உப்பு - சிறிது
  • பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

 

  • சாதத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • கொரகொரப்பாக அரைக்க வேண்டியவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அனைத்தையும் நன்கு பிசைந்து தாம்பாளத்தில் சிறு உருண்டைகளாக கிள்ளி வைக்கவும்.
  • 3 நாட்கள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.
  • தேவைப்படும் பொழுது எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரிக்கலாம்

Note:

அடிக்கின்ற வெயிலை வீணாக்காமல் இந்த வடகத்தை செய்தால் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.







பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

super... vadaham is very tasty thank u sister.........

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

பின்னூட்டத்திற்கு நன்றி.அழகான பொன் மொழி எழுதிய பின் பின்னூட்டத்தை பதிவு செய்து இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா கோவிக்காதீங்கோ.சாதத்தை மா மாதிரி நல்லா அரைக்க வேணுமா?முதல்நாள் சாதத்தை எடுக்கலாமா? எங்களுக்கும் வெயில் வந்து கொண்டு இருக்கு.செய்யப்போறன்.

சுரேஜினி

எதற்கு கோவிக்காதீங்கோ என்றீர்கள்??உங்கள் பின்னூட்டமும்,சந்தேகமும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.நன்றி.
ரொம்ப மாவு மாதிரி அரைக்கக்கூடாது.நறநறப்பாக அரைத்தால் போதும்.காய்ந்து போன அரைகுறை சாதமாக இருக்கும் வடகத்தைப்பொரிக்கும் பொழுது சாதம் நன்கு பொரிந்து பற்களில்நெருடும்.சுவையாக இருக்கும்.நான் கூட மீந்து போன சாதத்தில்,நீரில் ஊறிய சாதம் போன்றவற்றில் செய்வேன்
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா
வெங்காய வடகம் இன்றுதான் நன்கு காய்ந்து பொரித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு யோசித்துக்கொண்டிருக்கட்டும் என்றுதான் உடன் பின்னூட்டம் கொடுக்கவில்லை:). நல்ல வாசமாகவும் இருந்தது. யாரும் சமைக்கலாமில் பார்த்து மகிழுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வெங்காய வடகம் செய்தீர்களா?நன்றாக வந்தது குறித்து மகிழ்ச்சி.அட யாரும் சமைக்கலாமில் வருகின்றதா?ரொம்ப மகிழ்ச்சி.இப்பொழுதுதான் முதல் முறையாக என் குறிப்பு பிறர் கைவண்ணத்தில் மலரப்போகின்றது.பின்னூட்டத்திற்கு நன்றி அதிரா.
ஸாதிகா

arusuvai is a wonderful website