மாம்பழ மில்க் ஷேக்

தேதி: April 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கனிந்த மாம்பழம் - 5
சர்க்கரை - 1 கப்
மில்க்பவுடர் - 1 கப்


 

அனைத்தையும் மிக்ஸி பெரிய ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
சுமார் 1 லிட்டர்(5கப்) அளவு வருமாறு நீர் சேர்த்து கலக்கவும்.
நீண்ட கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஐஸ் துண்டங்களை மிதக்க விட்டு பரிமாறவும்.


ஹிமாம்பசந்த், பங்கனபள்ளி மல்கோவா போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்தால் சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நன்றாக இருந்தது என் ஹஸ் அடிக்கடி இது செய்து சாபிடுவார் நேற்று நான் செய்து குடுத்தேன். ரொம்ப நன்றாக இருந்தது.

ஸாதிகா அக்கா

இன்று மதியம் கொடுமையான வெய்யில்! மாம்பழ ஷேக் பிரிஜ்ல் வைத்து கூல்லா குடிக்க அருமையாக இருந்த்து

லதா ஹைஷ்

இப்படிக்கு
லதா

நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.இப்பொழுது மாம்பல சீஸன்.வெயிலுக்கு இநத ஷேக் சாப்பிட்டால் இதமாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ரொம்ப நல்ல இருந்தது மில்க் ஷேக் என் குட்டி பாப்பாவுக்கு கொடுத்தேன்,அவன் விரும்பி சாப்பிட்டான் அம்மா....ம்ம்ம்ம்ம் சொல்லறான். உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

மைதிலி

Mb

நன்றி மைதிலி உங்கள் பின்னூட்டத்திற்கு.உங்கள் குட்டிபாப்பா விரும்பி சாப்பிட்டார் என்ற வரிகளில் மகிழ்வுற்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் ஸாதிகா
வெய்யிலுக்கு நல்ல குறிப்பு மில்க்பவுடருக்கு பதிலா பால் விட்டு செய்யலாமா?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஓ..பால் பவுடருக்கு பதிலாக பாலும் விட்டு செய்யலாம்.நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த முறையில் இன்று மறுபடியும் மாம்பழ மில்க் ஷேக் செய்தேன் . நன்கு க்ரீமியாக கெட்டியாக வித்தியாசமான சுவையில் அருமையாக இருந்தது (நீர் மிக கம்மியாக சேர்த்தேன்)...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

பின்னூட்டத்திற்கு நன்றி.தேவைப்பட்ட அளவில் நீர் சேர்த்துக்கொல்ளலாம்.ரொம்ப கெட்டியாகவும் இருந்தாலும் சுமாராகி விடும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மாம்பழ மில்க் ஸேக் சுப்பர் நான் இந்த முறையில்தான் எப்பவும் செய்வேன்

அன்பு ஜஸி,பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா, பங்கனப்பள்ளி, மல்கோவா...:-(( இந்த மில்க் ஷேக்கை எனக்கு கிடைத்த ஏதோ ஒரு மாம்பழத்தில் செய்தேன். பால் சேர்த்து செய்தேன். நன்றாக கிரீமியாக இருந்தது. என் பெண்ணிற்கு மிகவும் பிடித்தது. நன்றி உங்களுக்கு.

மாம்பழ மில்க் ஷேக் எந்த ரக பழத்திலும் செய்யலாம்.மேற்கூறிய ரக பழங்களில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்றுதான் பழங்களின் ரகங்களிக்குறிப்பிட்டேன்.அதிலு கிளிமூக்கு போன்ற பழங்களில் செய்தால் மணமும் இருக்காது.சுவையும் இருக்காது.நீங்கள் செய்த மாம்பழ ஷேக் நன்றாக அமைந்ததை குறித்து பெண்ணுக்கும் பிடித்து இருந்தமைக்கு மகிழ்ச்சி.பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றிவானதி.
ஸாதிகா

arusuvai is a wonderful website