கிரீனிஷ் மோர்

தேதி: April 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தயிர் - ஒரு கப்
மோர் - இரண்டு கப்
தண்ணீர் - ஒரு டம்ளர்
கொத்தமல்லித்தழை - மூன்று மேசைக்கரண்டி
புதினா - ஆறு இதழ்
கறிவேப்பிலை - ஆறு இதழ்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
ஐஸ் க‌ட்டிக‌ள் - ப‌த்து
பச்சைமிளகாய் - ஒன்று


 

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சைமிளகாய் நன்கு கழுவி பொடியாக அரிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும்.
பிறகு அத்துடன் மோர், தயிர், தண்ணீர், ஐஸ் கட்டி, வெந்தயம், தேவைக்கு உப்பு சிறிது சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
குழ‌ந்தைக‌ளுக்கு வ‌டிக‌ட்டி கொடுக்க‌வும். பெரிய‌வ‌ர்க‌ள் அப்ப‌டியே குடிக்க‌லாம். ந‌ல்ல‌ புத்துண‌ர்வும் கிடைக்கும்.
அப்ப‌டியே சுவை சொல்ல வார்த்தைக‌ள் இல்லை, ஜில்லுனு ஜிலு ஜிலுன்னு மூளைய‌ அப்ப‌டியே கூல் ப‌ண்ணிடும். இஞ்சி ம‌ண‌ம் ம்ம் சூப்ப‌ராக‌ இருக்கும்.


வெயில் நேர‌த்திற்கு ஏற்ற‌ கூல் கூல் கிரீனிஷ் மோர்

மேலும் சில குறிப்புகள்