அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்

தேதி: April 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

மாங்காய் - 10
சால்ட் - 1 கப்
வெந்தயம் - 1/2 கப்
கடுகு - 1/2 கப்
நல்லெண்ணெய் - 2 கப்
பெருங்காயப்பொடி - சிறிது


 

மாங்காயை கொட்டையுடன் இரண்டாக நறுக்கவும். கொட்டை உள்ள பகுதில் தடிமனான பகுதியையும் சேர்த்து ஒரு இன்ச் துண்டங்களாக நறுக்கவும்.
கடுகு, வெந்தயத்தை பொடிக்கவும்.
அனைத்தையும் செராமிக் ஜாடியில் போட்டு ஈரமில்லாத கம்பால் கலக்கி ஒரு நாள் முழுவதும் நிழலில் உலர்த்தவும்.
மறு நாளில் இருந்து குறைந்தது ஐந்து நாட்களுக்காவது வெயில் வைக்கவும்.
அடிக்கடி ஈரமில்லாத கம்பால் கிளறி விடவும்.
கடுகு, வெந்தயம், எண்ணெய் அனைத்தையும் வறுக்காமல் சேர்த்தால்தான் அசல் ஆவக்காய் ஊறுகாய்.


கடுகு, வெந்தயத்தை வறுத்தும், எண்ணெயை சூடாக்கியும் சேர்த்தால் சுவை வித்தியாசப்படும். சிலர் இதில் வெள்ளை கொண்டைக்கடலை சேர்ப்பார்கள்.

மேலும் சில குறிப்புகள்