நூடுல்ஸ் சூப்

தேதி: April 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ப்ளைன் நூடுல்ஸ் - 100 கிராம்
கேரட் - 1
பீன்ஸ் - 5
கோஸ் - 50 கிராம்
வெள்ளை வெங்காயம் - பாதி
எண்ணெய் - தேவைக்கு
செலரி - சிறிது
ஸ்பிரிங் ஆனியன் - 3
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சோயாசாஸ் - 1 1/2 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கார்ன்மாவு - 2 டீஸ்பூன்
பட்டர் - 1 டீஸ்பூன்


 

கேரட், கோஸ், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
சுமார் ஒரு லிட்டர் நீரில் அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
3/4 லிட்டர் ஆக வற்றும் வரை கொதிக்க விடவும்.
நூடுல்ஸை வேக வைத்து குளிர்ந்த நீரில் நனைத்து ஆறியதும் சிறிது சிறிதாக போட்டு எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்துக்கொள்ளவும்.
1 டீஸ்பூன் பட்டர் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, வெந்த காய் மற்றும் வெஜிடபிள் ஸ்டாகை இதில் சேர்க்கவும்.
கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் கார்ன் மாவை கலந்து சேர்த்துக்கிளறவும்
சோயா சாஸ், பொடியாக நறுக்கிய செலரி, ஸ்பிரிங் ஆனியன், மிளகுப்பொடி அனைத்தையும் கலந்து இறுதியாக பொரித்த நூடுல்ஸை சேர்த்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

என் மகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன்.இன்று உங்கள் முறைப்படி இருந்த காய்கறி வைத்து செய்தேன்.டேஸ்ட் சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆஸியா,பின்னூட்டத்திற்கு நன்றி.ஊருக்கு வந்த பிஸியிலும் அறுசுவை பார்த்து சமைப்பது மட்டுமில்லாமல் பின்னூட்டமும் கொடுத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
ஸாதிகா

arusuvai is a wonderful website