சில்லி பிஷ்

தேதி: April 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் - 8-10
பஜ்ஜிமிளகாய் - 2
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
கிரீன்சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
ரெட்சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
டொமேட்டொ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
கார்ன்மாவு -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை - 1


 

மிளகாய்த்தூளை உப்பு சேர்த்து சிறிது நீரில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டில் மீன் துண்டங்களை தோய்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
தவாவில் சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சிவக்கும் வரை பொரித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நான்காக வெட்டி இதழ் இதழாக பிரிக்கவும்.
பஜ்ஜி மிளகாயை ரிங்ரிங் ஆக நறுக்கவும்
குடை மிளகாயை 1 இன்ச் நீளத்திற்கு சதுரமாக நறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சிவந்து விடாமல் வதக்கவும்.
நறுக்கிய குடை மிளகாய், பஜ்ஜி மிளகாய் சேர்க்கவும்.
அனைத்து சாஸ் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
1/4 டம்ளர் நீரில் கார்ன்மாவை கரைத்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.
சர்விங் பவுலில் மீன்களை வைத்து, கிரேவியை தேவையான அளவு ஊற்றவும்.
எலுமிச்சையை எட்டாக நறுக்கி பிளேட்டின் ஓரத்தில் வைத்து விரும்பினால் ஆனியன் ரிங்கால் அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்